Header Logo
SLIC
வணிகம்
தீவா பிரெஷ்ஷின் புதிய கறைகளுக்கு எதிராக போராடும் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தும் நகரத்திற்கு நகரம் பிரசாரம் ஆரம்பம்

Sep 3, 2026 - 11:18 AM

தீவா பிரெஷ்ஷின் புதிய கறைகளுக்கு எதிராக போராடும் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தும் நகரத்திற்கு நகரம் பிரசாரம் ஆரம்பம்
Mobitel Inner 1278
EDEX Inner

ஹேமாஸ் கொன்சியூமர் பிராண்ட்ஸ் (Hemas Consumer Brands) நிறுவனத்தின் முதன்மையான சலவை வர்த்தகநாமமான தீவா பிரெஷ் (Diva Fresh), மேம்படுத்தப்பட்ட Stain Fighter (கறைகளுக்கு எதிராக போராடும்) தொழில்நுட்பம், ‘Perfume Booster’ (வாசனை ஊக்கி), ஆடைகளை மிகவும் தூய்மையாகவும் பிரகாசமாகவும் தோற்றமளிக்க உதவும் ‘Optical Brightener’ (பிரகாசமான தோற்றம்) ஆகிய தொழில்நுட்பங்களுடன் மீள அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வர்த்தகநாமம் தனது Diva Fresh Stain Fighters Gamin Gamata எனும் நகரங்கள் தோறுமான ஊக்குவிப்பு பிரசாரத்தின் மூலம் தனது தயாரிப்பை நேரடியாக நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கிறது. 

இது வெறுமனே ஒரு தயாரிப்பை சந்தைப்படுத்தும் பிரசாரத்திற்கு அப்பால், நுகர்வோர் தீவா பிரெஷ்ஷை தாங்களாகவே பயன்படுத்தி அதன் அனுபவத்தை பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுப் பொலிவுடன் மீள அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சலவைத் தூளானது, சட்டையின் மணிக்கட்டு மற்றும் கொலர் பகுதிகளில் ஏற்படும் கறைகள், தூசி, சேறு, கோப்பி, தேநீர் மற்றும் சோஸ் போன்ற அன்றாட கறைகளில் எவ்வாறு செயற்படுகிறது என்பதை நேரடியான செயன்முறை விளக்கங்கள் மூலமாகவும் நுகர்வோரின் பங்குபற்றுதலுடனான விளையாட்டுகள் மற்றும் செயற்பாடுகள் மூலமாகவும் வெளிப்படுத்துகிறது. இது குறித்து, தீவா பிரெஷ் நிறுவனத்தின் வர்த்தகநாம முகாமையாளர் பிரணீத் கொலன்னகே தெரிவிக்கையில், மக்கள் தாங்கள் தினசரி எதிர்கொள்ளும் கறைகளில் ஒரு சலவைத் தூள் உண்மையான செயற்பாட்டை வெளிப்படுத்துமா என்பதை அறிய விரும்புகிறார்கள். அவர்களுக்கு மற்றுமொரு வாக்குறுதி தேவையில்லை. இந்த காரணத்திற்காகவே, மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட தீவா பிரெஷ்ஷை நாம் நேரடியாக நுகர்வோரிடம் கொண்டு வருகிறோம். இதனால் அவர்கள் அதை தாங்களே அனுபவிக்க முடியும். நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அதே வேளையில், புதிய Stain Fighter தொழில்நுட்பத்துடன் தயாரிப்பை நாம் மேம்படுத்தியுள்ளோம். தீவா 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை வீடுகளின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. அத்துடன் இந்த மீள் அறிமுகமானது எமது நுகர்வோரின் தேவைகளை மனதில் கொண்டு நாம் இன்னும் மேம்பட்டு வருகிறோம் என்பதை காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. என்றார். 

மேம்படுத்தப்பட்ட தீவா பிரெஷ், ஆடைகளிலிருந்து அன்றாட கறைகளை விரைவாகவும் எளிதாகவும் அகற்றுவதற்கு கறைகளுக்குள் ஆழமாக ஊடுருவி அவற்றை உடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கறை-எதிர்ப்பு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. Diva Fresh Stain Fighters Gamin Gamata பிரசாரமானது தயாரிப்பு அனுபவத்தை நேரடியாக மக்களிடம் எடுத்துச் சொல்கிறது. இது மீள அறிமுகப்படுத்தப்பட்ட தீவா பிரெஷ்ஷை அன்றாட கறைகளுக்கு எதிராக பரிசோதித்து அறிய நுகர்வோருக்கு வாய்ப்பளிக்கிறது. நேரடியாக அமைக்கப்பட்ட சலவை செய்யும் இடத்தில் இணைந்து தீவா பிரெஷ்ஷின் உண்மையான செயல்திறனை நுகர்வோரினால் அனுபவிக்க முடியும். அத்துடன் தயாரிப்பைப் பயன்படுத்தும் போது பங்கேற்புடனான விளையாட்டுகள் மற்றும் செயற்பாடுகளில் ஈடுபடவும் பரிசுகளை வெல்வதற்கும் அவர்கள் வாய்ப்புகளை பெறுவார்கள். 

Diva Fresh Stain Fighters Gamin Gamata பிரசாரமானது 2 மாதங்களாக பல்வேறு நகரங்களுக்குப் பயணம் செய்து, நுகர்வோர் வாழ்கின்ற, பணியாற்றுகின்ற மற்றும் சலவை செய்கின்ற இடங்களுக்கு வர்த்தகநாமத்தின் கறை எதிர்ப்பு வாக்குறுதியை நேரடியாகக் கொண்டு சென்றது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை வீடுகளில் உறுதுணையாக இருக்கும் ஒரு வர்த்தகநாமத்திற்கு, இந்த மீள்அறிமுகமானது ஒரு புதிய உறுதிப்பாட்டை காட்டுகிறது. தீவா பிரெஷ் ஆடைகளை சுத்தம் செய்வதற்கு மாத்திரமல்லாமல், வெறும் வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்டு ஆதாரங்களை தேடுகின்ற நுகர்வோருக்குமானது. 

Hemas Consumer Brands பற்றி 

60 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் வீட்டுப் பராமரிப்பு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணியில் உள்ள ஹேமாஸ் கொன்சியூமர் பிராண்ட்ஸ், ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதற்காக குடும்பங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இலங்கையில் தங்களது நோக்கம் சார்ந்த வர்த்தகநாமங்களை நம்பிக்கையான வீட்டுப் பெயர்களாக நிறுவுவதற்கு உதவிய வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட திட்டங்களில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் இந்நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. இலங்கை நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகள் மூலம் சிறந்த தரம் மற்றும் மதிப்பை வழங்குவதற்கான மாறாத அர்ப்பணிப்புடன், நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை ஹேமாஸ் கொன்சியூமர் பிராண்ட்ஸ் தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

Mobitel 1278