Header Logo
SLIC
வணிகம்
Nations Trust Bank வழங்கும் CFW Couture + Trousseau, ‘Living Sculpture’ கருப்பொருளில் | செப்டம்பர் 17, 18 மற்றும் 19

Sep 3, 2026 - 11:23 AM

Nations Trust Bank வழங்கும் CFW Couture + Trousseau, ‘Living Sculpture’ கருப்பொருளில் | செப்டம்பர் 17, 18 மற்றும் 19
Mobitel Inner 1278
EDEX Inner

சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த Couture வடிவமைப்பாளர்களை ஒரே மேடையில் இணைக்கும் தெற்காசியக் கதை; இம்முறை Wedding Tourism Summit முக்கிய அங்கமாக இடம்பெறுகிறது 

Nations Trust Bank வழங்கும் CFW Couture + Trousseau, செப்டம்பர் 17 முதல் 19 வரை மீண்டும் நடைபெறவுள்ளது. இம்முறை, கலைக்கான ஒரு தனித்துவமான அணுகுமுறையாக “Living Sculpture” என்ற கருப்பொருளின் கீழ் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. CFW கருத்தாக்கத்தில் உருவாகும் இந்த நிகழ்வு, இலங்கை மற்றும் தெற்காசியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவமைப்பாளர்களின் படைப்புகள் வழியாக Couture வடிவமைப்பின் ஆழத்தையும் கலைநயத்தையும் வெளிப்படுத்தவுள்ளது. நிகழ்வுகள் City of Dreams Sri Lanka வளாகத்தில் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நடைபெறும். 

தற்போது தனது 23ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் Colombo Fashion Week, இலங்கையைப் பிராந்திய ஃபேஷன் மையமாக நிலைநிறுத்துவதும், தெற்காசிய வடிவமைப்புத் திறமைகள் ஒன்றிணையும் முக்கியச் சந்திப்பிடமாக கொழும்பை உருவாக்குவதும் என்ற தனது ஆரம்ப நோக்கை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. 2003ஆம் ஆண்டு முதல், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வடிவமைப்பாளர்களுக்கு தொடர்ச்சியான பிராந்திய மேடையாக CFW செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கலாசார பரிமாற்றம் மற்றும் சந்தை வாய்ப்புகளை இணைக்கும் ஒரு தெற்காசியக் கதையை உருவாக்கியுள்ளது; இத்தகைய தொடர்ச்சியான பங்களிப்பை துணைக்கண்டத்தில் மிகக் குறைந்த தளங்களே வழங்கி வருகின்றன. 

இந்த பிராந்திய மற்றும் சர்வதேச பார்வை, இம்முறையும் BRICS International Fashion Federation உடனான CFW இன் தொடர்ச்சியான கூட்டாண்மையின் மூலம் மேலும் விரிவடைகிறது. அதன் ஒரு பகுதியாக, சீனாவைச் சேர்ந்த ஒரு வடிவமைப்பாளர் CFW Couture + Trousseau மேடையில் தனது படைப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளார். இலங்கை மற்றும் தெற்காசிய ஃபேஷனை பரந்த சர்வதேசச் சந்தைகளுடனும் உலகளாவிய வடிவமைப்பு உரையாடல்களுடனும் இணைக்கும் CFW இன் தொடர்ச்சியான பங்கை இந்த ஒத்துழைப்பு பிரதிபலிக்கிறது. 

Ajai Vir Singh, Founder & Managing Director, Colombo Fashion Week, கருத்துத் தெரிவிக்கையில்: 

கடந்த 23 ஆண்டுகளாக Colombo Fashion Week, இன்று நாம் காணும் ஃபேஷன் சூழலமைப்பை மீளுருவாக்கி, வரையறுத்து, உருவாக்கி வந்துள்ளது. இதே காலப்பகுதியில், தெற்காசிய வடிவமைப்பாளர்கள் ஒன்றிணைந்து தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு மேடையையும் நாம் உருவாக்கியுள்ளோம். South Asiaவில் Swim Week என்ற கருத்தை hybrid presentation format மூலம் அறிமுகப்படுத்தினோம். Pret எவ்வாறு வடிவமைப்பாளர்கள் வளரக்கூடிய ஒரு தளமாக அமைந்ததோ, அதைப் போல இம்முறை Couture துறையிலும் அவர்கள் வளரக்கூடிய புதிய வாய்ப்பை அறிமுகப்படுத்துகிறோம். City of Dreamsஇல் தனித்துவமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் Living Sculpture என்ற கருப்பொருளின் கீழ் Couture-ஐ வழங்கவுள்ளோம், என்றார். 

இந்த பருவத்தின் வடிவமைப்பாளர் வரிசை Couture கைவினைத்திறன் மற்றும் நுணுக்கத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு collection-உம் bridal மற்றும் trousseau பிரிவுகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் வேகமாக வளர்ந்து வரும் bridal மற்றும் destination wedding சந்தையில் இலங்கை வடிவமைப்பாளர்களை வலுவாக நிலைநிறுத்துவது என்ற CFW-இன் விரிவான மூலோபாயத்தையும் இந்த அணுகுமுறை பிரதிபலிக்கிறது. Runway நிகழ்வுகளுடன் இணைந்து நடைபெறும் Wedding Tourism Summit, ஃபேஷன், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறைகளைச் சேர்ந்த முக்கிய குரல்களை ஒன்றிணைத்து, destination wedding சந்தையாக இலங்கையின் வாய்ப்புகள் மற்றும் நிலைப்பாட்டை ஆராயும். 

Niluka Gunatilake, Senior Vice President, Cards & Consumer Assets, Nations Trust Bank, கருத்துத் தெரிவிக்கையில்: 

CFW Couture + Trousseau நிகழ்வை வழங்குவதில் Nations Trust Bank பெருமகிழ்ச்சி அடைகிறது. Bridal மற்றும் destination weddings ஆகியவை இலங்கை மற்றும் தெற்காசிய வடிவமைப்புத் துறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றாகும். இந்தத் தளம், எங்கள் வடிவமைப்பாளர்களுக்கு அந்தச் சந்தையை நேரடியாக அணுகுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. Colombo Fashion Week-ஐ ஆதரிப்பது என்பது, ateliers முதல் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய பரந்த துறைகள் வரை உண்மையான பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு தொழில்துறையை ஆதரிப்பதாகும். அந்த ஆற்றல் இந்த செப்டம்பரில் Living Sculpture ஆக வெளிப்படுவதை காண ஆவலுடன் உள்ளோம், என்றார். 

CFW Couture + Trousseau இம்முறை Couture Cuisine என்ற புதிய அனுபவத்தையும் அறிமுகப்படுத்துகிறது. மூன்று நாட்கள் முழுவதும் விருந்தினர்களுக்காக ஃபேஷன் மற்றும் உணவுக் கலையை ஒரே அனுபவமாக இணைக்கும் வகையில் இந்த ஒத்துழைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Kamal Munasinghe, Senior Vice President, Colombo Hotels, Cinnamon Hotels & Resorts and General Manager, Cinnamon Life at City of Dreams Sri Lanka, கருத்துத் தெரிவிக்கையில்: City of Dreams-இல் நடைபெறும் CFW Couture + Trousseau என்பது ஒரு runway show மட்டுமல்ல. விருந்தினர்கள் பயணிக்கும் நிகழ்விடங்கள் முதல் நிகழ்ச்சிகளுக்கிடையிலான ஒவ்வொரு தருணமும் இணைந்த ஒரு முழுமையான அனுபவமாக இது அமைகிறது. Fashion, food மற்றும் hospitality தனித்தனி நிகழ்வுகளாக அல்லாமல் ஒரே கதையாக ஒன்றிணைந்து செயல்படக்கூடிய இதுபோன்ற அனுபவங்களுக்காகவே City of Dreams ஒரு destinationஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செப்டம்பரில் CFW-உடன் இணைந்து நாம் உருவாக்க விரும்புவது அதுவே, என்றார். 

CFW Couture + Trousseau 2026 நிகழ்வை Nations Trust Bank வழங்குவதுடன், Cinnamon Life at City of Dreams venue partner-ஆக இணைகிறது. மேலும், Lanka Walltiles, Vision Care, Hameedia மற்றும் Ramani Fernando ஆகியவற்றின் தொடர்ச்சியான ஆதரவும் கிடைக்கிறது. இதற்கு மேலாக, Acorn, Pulse, News First, Ceylon Today, Emerging Media மற்றும் Hard Talk ஆகிய பங்காளர்களும் CFW-ஐ ஆதரிக்கின்றனர். 

இலங்கையின் ஃபேஷன் வடிவமைப்புத் துறையின் முதுகெலும்பாகத் தொடர்ந்து செயல்பட்டுவரும் CFW, அந்தத் துறையின் தனித்துவமான குரலாகவும், தனது பங்காளர்களுடன் இணைந்து வலுவான ஃபேஷன் சூழலமைப்பை உருவாக்கும் முக்கிய தளமாகவும் தொடர்கிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

Mobitel 1278