Sep 10, 2026 - 06:42 PM

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில், பொய் சாட்சியமளித்த சாட்சி ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், சாட்சியமளித்த பாலித கமகே என்ற சாட்சி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்திற்கு முரணாகச் சாட்சியமளிப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதன்படி, பொய் சாட்சியமளித்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த சாட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அந்த சாட்சியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.





























