Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரியங்கரவிற்கு எதிராக மாற்றொரு வழக்கு

Sep 11, 2026 - 09:48 PM

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரியங்கரவிற்கு எதிராக மாற்றொரு வழக்கு
Mobitel Inner 1278

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிற்காக இன்று (11) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

கடந்த 2013ஆம் ஆண்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சட்டவிரோதமான முறையில் வெசாக் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 128,520 ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இவ்வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷந்த கொடவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். 

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், இவ்வழக்கின் சாட்சியாளராக விசாரணையுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவரை இணைத்துக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரினார். 

அக்கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, இவ்வழக்கின் விசாரணை இறுதி நிலையை எட்டியுள்ள தருணத்தில், புதிதாக சாட்சியாளர்களை இணைத்துக்கொள்ள அனுமதி கோருவதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறினார். 

எவ்வாறாயினும், இது தொடர்பான தனது உத்தரவை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி ரஷந்த கொடவெல, குறித்த விசாரணை அதிகாரியை இவ்வழக்கின் சாட்சியாளராக இணைத்துக்கொள்ள அனுமதி அளிப்பதாகத் தெரிவித்தார். 

அதற்கமைய, குறித்த சாட்சியாளரின் ஊடாக நீதிமன்றத்திற்கு ஆவணங்களைச் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பின், அவற்றை இன்றைய தினத்திலிருந்து ஒரு வாரத்திற்குள் பிரதிவாதித் தரப்பிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார். 

கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதிக்கும் ஜூன் மாதம் 6ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றி போது, சட்டவிரோதமான முறையில் 3,000 வெசாக் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 128,520/- ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தி "ஊழல்" எனும் குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றம் சுமத்தி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சருக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

Mobitel 1278