Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
மகளிர் ஆசியக் கிண்ணம்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இலங்கை மகளிர் அணி

Sep 11, 2026 - 11:38 PM

மகளிர் ஆசியக் கிண்ணம்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இலங்கை மகளிர் அணி
Mobitel Inner 1278

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது. 

டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் அணியின் தலைவி Fatima Sana ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

பந்து வீச்சில் இலங்கை மகளிர் அணி சார்பில் Chamari Athapaththu மற்றும் Chamudi Praboda தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். 

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

துடுப்பாட்டத்தில் இலங்கை மகளிர் அணி சார்பில் Harshitha Samarawickrama அதிகபட்சமாக 36 ஓட்டங்களையும், Kavisha Dilhari 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

பந்து வீச்சில் பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் Fatima Sana 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இதற்கமைய இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ

காணொளி
முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

Mobitel 1278