Header Logo
Vallibel FD
Selan Bank
விளையாட்டு
18 வயதில் மரணமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர்!

Sep 14, 2026 - 05:50 PM

18 வயதில் மரணமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர்!
Mobitel Inner 1278

வைபவ் சூரியவன்ஷிக்கு முன்பே சச்சினுடன் ஒப்பீடு செய்யப்பட்ட இந்திய வீரர் தனது 18 வயதில் மரணமடைந்தார். 

கிரிக்கெட்டில் சாதனை வீரர்கள் எப்போதும் நினைவுகொள்ளப்படுவார்கள். ஆனால் அதில் சில விதிவிலக்குகள் உள்ளன. 

அப்படியான விதிவிலக்கான வீரரின் நினைவே இந்த தொகுப்பு. வளர்ந்து வரும் ஷார்ட் பார்மெட் கிரிக்கெட் தொடர்களால் பல வீரர்கள் உருவாகியுள்ளனர். குறிப்பாக வைபவ் சூரியவன்ஷியை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்திய அணியின் தற்போதைய செல்லப் பிள்ளை சூர்யவன்ஷி தான். 

குறைந்த காலத்தில் இந்திய அணியில் களமாடத் தொடங்கியிருக்கிறார் அவர். கிரிக்கெட்டில் சாதனை வீரர்கள் எப்போதும் நினைவுகொள்ளப்படுவார்கள். ஆனால் அதில் சில விதிவிலக்குகள் உள்ளன. அப்படியான விதிவிலக்கான வீரரின் நினைவே இந்த தொகுப்பு. வளர்ந்து வரும் ஷார்ட் பார்மெட் கிரிக்கெட் தொடர்களால் பல வீரர்கள் உருவாகியுள்ளனர். குறிப்பாக வைபவ் சூரியவன்ஷியை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்திய அணியின் தற்போதைய செல்லப் பிள்ளை சூர்யவன்ஷி தான். குறைந்த காலத்தில் இந்திய அணியில் களமாடத் தொடங்கியிருக்கிறார் அவர். 

ஆனால் வைபவ் சூர்யவன்ஷிக்கு முன்பே 13 வயதில் இந்திய கிரிக்கெட்டில் கலக்கி வந்த ஒரு சிறுவன், அப்போதே சச்சினுடன் ஒப்பிடப்பட்டார். அவர் தான் பஞ்சாபைச் சேர்ந்த துருவ் பாண்டவ். 1987 ஆம் ஆண்டு, தனது 13 வயதில் முதல் தரப் போட்டிகளில் அறிமுகமான துருவ், ஒரு கிரிக்கெட் வீரராக தனது 14 வயதில் சதம் அடித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

1988 ஆம் ஆண்டு ரஞ்சி கிண்ணத்தில் பஞ்சாப் - ஜம்மு காஷ்மீர் அணியுடன் மோதவிருந்தது. துருவ் பாண்டவிற்கு அது இவ்வளவு பெரிய நாளாக அமையும் என்று அப்போது யாரும் நினைத்திருக்கவில்லை. அந்த சமயத்தில் துருவ்விற்கு 14 வயதுதான். அவர் தனது மூன்றாவது போட்டியிலேயே சதம் அடித்திருந்தார். ஒரு போட்டியில் மொத்தம் 137 ஓட்டங்களை குவித்தார். அதன் பிறகு, பலர் அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடத் தொடங்கினர்.​ை 

இதன்பின் 1991 இல் சர்வீசஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் அணிக்காக துருவ் 170 ஓட்டங்களை எடுத்தார். இது ரஞ்சி டிராபியில் அவரது அதிகபட்ச ஸ்கோர். இந்தக் காலகட்டத்தில், தனது 17 வயது மற்றும் 341 நாட்களில் கிரிக்கெட்டில் 1,000 ஓட்டங்கள் என்கிற சாதனையை துருவ் நிகழ்த்திய போட்டியே அவரது கடைசி ரஞ்சி டிராபி போட்டியாக அமைந்தது. 

தியோதர் கிண்ணத்தில் போட்டியில் பங்கேற்றுவிட்டு பாட்டியாலாவுக்கு வாடகைக் காரில் சென்று கொண்டிருந்தார் துருவ். அவர் பயணித்த கார் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியது. இதில் ஓட்டுநருடன் சேர்ந்து துருவ் பாண்டவ்வும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இந்தியா ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரை இழந்தது. துருவ் பாண்டவ் இறந்தபோது அவருக்கு வயது 18 மட்டுமே.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

Mobitel 1278