Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
திலித்தின் ரிட் மனு மேலதிக விசாரணைக்காக 18ஆம் திகதி அழைப்பு

Sep 14, 2026 - 06:51 PM

திலித்தின் ரிட் மனு மேலதிக விசாரணைக்காக 18ஆம் திகதி அழைப்பு
Mobitel Inner 1278

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி கோட்டை நீதவான் தமக்கு எதிராகச் செய்துள்ள குறிப்பை சவாலுக்குட்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக செப்டெம்பர் 18ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றைய தினம் (14) உத்தரவிட்டுள்ளது. 

இதற்கமைய, அன்றைய தினம் இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய, சமத் மொராயஸ் மற்றும் ஆதித்ய படபெந்திகே அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்படவுள்ளது. 

சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தொலைக்காட்சி நேர்காணலொன்றில் நீதிமன்றத்தை அவமதித்துள்ளாரா? என்பது குறித்து ஆராயுமாறு கோட்டை நீதவான் செய்திருந்த குறிப்பு, இன்று இரண்டாவது நாளாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது. 

இதன்போது மனுதாரரான திலித் ஜயவீர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, தனது கட்சிக்காரரின் நிரபராதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக, சர்ச்சைக்குரிய குறித்த நேர்காணலை திறந்த நீதிமன்றத்தில் ஒளிபரப்பத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு கோரினார். 

அந்தக் கோரிக்கைக்குப் பதிலளித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், தொடர்புடைய வீடியோவை நீதிமன்றத்தில் ஒளிபரப்பத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டது. 

அதனைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற் கொள்ளப்பட்ட பின்னர், இந்த ரிட் மனுவை அது தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் செப்டெம்பர் 18ஆம் திகதி அழைப்பதற்கு உத்தரவிடப்பட்டது.

 


MOST READ

காணொளி
ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

Mobitel 1278