Sep 15, 2026 - 10:47 PM

பொலிஸ் சான்றளிப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காகப் பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாக விண்ணப்பிக்கும் வாய்ப்பு விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணினி அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இணையவழி ஊடாக பொலிஸ் சான்றளிப்பு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கணினி முறைமை சீரமைக்கப்படும் வரை, விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்குப் பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாகச் செயற்படுமாறு பொலிஸார் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.





























