Sep 15, 2026 - 11:02 PM

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது இருபது20 கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் (Toss) இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி, இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க முதலில் பந்துவீசுவதற்குத் தீர்மானித்துள்ளார்.
இப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் (Southampton) நகரில் நடைபெறுவதுடன், இலங்கை நேரப்படி இன்று இரவு 11.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.





























