Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
ஆண்டுக்கான காப்புறுதி முகவர் விருதுக்கான உலகளாவிய இறுதிப்போட்டியாளர்கள் 3 பேரில் செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் A. I. P. மஞ்சுளவும் ஒருவர்

Sep 28, 2026 - 04:35 PM

ஆண்டுக்கான காப்புறுதி முகவர் விருதுக்கான உலகளாவிய இறுதிப்போட்டியாளர்கள் 3 பேரில் செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் A. I. P. மஞ்சுளவும் ஒருவர்
Mobitel Inner 1278

செலிங்கோ லைஃப் நிறுவனம், நிறுவனத்தின் அம்பலாந்தோட்டை கிளையைச் சேர்ந்த A. I. P. மஞ்சுள, 11வது ஆசியாவின் நம்பிக்கைக்குரிய ஆயுள் காப்புறுதி முகவர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கான விருதுகள் (Asia Trusted Life Agents & Advisers Awards-ATLAA) 2026 இல் மதிப்புமிக்க ஆண்டுக்கான காப்புறுதி முகவர் விருதுக்கான மூன்று உலகளாவிய இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராகத் தேர்வாகியுள்ளதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் ஆயுள் காப்புறுதி மற்றும் நிதி ஆலோசனைத் துறையின் நிபுணர்களுக்கான பிராந்தியத்தின் மிகவும் மதிப்புமிக்க தளங்களில் ஒன்றில் இலங்கை காப்புறுதித் துறையின் சிறப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

செலிங்கோ லைஃப் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்த அங்கீகாரம் அதன் முகவர் குழுவின் தரத்தையும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையையும் பிரதிபலிக்கிறது, அதேவேளை மஞ்சுளவைப் பொறுத்தவரை, இது பிராந்திய அளவில் குறிப்பிடத்தக்க தனிப்பட்ட சாதனையாகும், வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் அவர் கொண்ட அர்ப்பணிப்பு, தொழில்முறைத் திறன் மற்றும் உறுதிப்பாட்டுக்கு கிடைத்த அங்கீகாரமாக இது அமைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ATLAA திட்டம், திறமை, வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் காப்புறுதிதாரர்களின் நலன்களுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றில் சிறப்பான தரநிலைகளை வெளிப்படுத்தும் உயர் செயல்திறன் கொண்ட நிபுணர்களை அங்கீகரிக்கிறது. 

ATLAA 2026 தெற்காசியா, தென்கிழக்காசியா, கிழக்காசியா மற்றும் பரந்த ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதிலிருந்தும், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஹொங்கொங், தைவான், சீனா, மக்காவ், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற சந்தைகள் உட்பட, பரிந்துரைகளை ஈர்த்தது. 

மூன்று இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் மஞ்சுள பெற்றுள்ள சாதனை, மிகவும் போட்டித்தன்மை மிக்க பிராந்தியக் களத்தில் இலங்கை காப்புறுதித் துறையின் தொழில்முறைத் திறனுக்கான குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைப் பிரதிபலிப்பதுடன், வாடிக்கையாளர்களையும் அவர்களின் நீண்டகால நலன்களையும் காப்புறுதி ஆலோசனையின் மையமாக வைப்பதன் பெறுமதியையும் வலுப்படுத்துகிறது, என நிறுவனம் மேலும் தெரிவித்தது. 

2026 ஆம் ஆண்டுக்கான Brand Finance இன் நாட்டின் 100 மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகளின் தரவரிசையில் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க காப்பீட்டு பிராண்டாகத் தரவரிசைப்படுத்தப்பட்ட செலின்கோ லைஃப், 2026 SLIM காந்தார் மக்களின் விருதுகள் (2026 SLIM Kantar People’s Awards) விருது வழங்கும் விழாவில், தொடர்ந்து 20-வது ஆண்டாக ஆண்டின் மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் ன்ற விருதை முன்னெப்போதும் இல்லாத வகையில் வென்றுள்ள செலிங்கோ லைஃப், World Finance நிறுவனத்தால் தொடர்ந்து 12 ஆண்டுகளாக இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் மிகவும் பெறுமதிமிக்க காப்புறுதி வர்த்தக நாமமாகவும் செலிங்கோ லைஃப் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. காப்புறுதிதாரர்களின் இலட்சியங்களைப் பாதுகாத்து, அவற்றுடன் தொடர்புடைய இடர்களைக் குறைக்கும் வகையில், நிறுவனம் புதுமையான காப்புறுதித் தீர்வுகளை வழங்கி வருகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
03
கொமர்ஷல் வங்கியானது தேசியளவிலான கடலோரம் மற்றும் நீர்நிலைகள் தூய்மைப்படுத்தல் திட்டத்தின் ஊடாக சுற்றுச்சூழல் சார்ந்த தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்

கொமர்ஷல் வங்கியானது தேசியளவிலான கடலோரம் மற்றும் நீர்நிலைகள் தூய்மைப்படுத்தல் திட்டத்தின் ஊடாக சுற்றுச்சூழல் சார்ந்த தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்

Sep 28, 2026 - 04:51 PM


காணொளி
திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

Mobitel 1278