Sep 28, 2026 - 05:07 PM

போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஈரான் முன்வைத்த ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்தமையினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஈரான் ஒப்பந்தத்தை முன்வைத்திருந்தது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான அதன் மோதலை இராஜதந்திரம் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று ஈரான் வலியுறுத்தியது.
லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் 7 நாட்களுக்குள் போரை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளை ஈரான் முன்வைத்திருந்தது.
இதனை ட்ரம்ப் தற்போது உறுதியாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
அதன்படி பிரண்ட் ரக கச்சா எண்ணெய் விலை 107.8 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.
டபுள்யு டி.ஐ கச்சா எண்ணெய் 95.76 அமெரிக்க டொலராக அதிகரித்து விற்பனையாகின்றது.
இதுதவிர மேர்பன் ரக கச்சா எண்ணெய் 121.4 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.































