Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
சஷீந்திரவுக்கு எதிரான வழக்கு: ஆட்சேபனைகள் மீதான கட்டளை ஒக்டோபரில்!

Sep 28, 2026 - 05:36 PM

சஷீந்திரவுக்கு எதிரான வழக்கு: ஆட்சேபனைகள் மீதான கட்டளை ஒக்டோபரில்!
Mobitel Inner 1278

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு தொடர்பான முதற்கட்ட ஆட்சேபனைகள் மீதான கட்டளையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி பிறப்பிக்கவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

இந்த வழக்கு இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.

 

இதன்போது, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இழப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் பணிப்பாளர் சேபாலிகா சமன் குமாரி மற்றும் மகாவலி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி பண்டார கொடகம ஆகிய பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

 

வழக்கு விசாரணையின் போது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான அஸ்திக தேவேந்திர, சமிந்த அத்துகோரள மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பிரேமரத்ன ஆகியோர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிராக முதற்கட்ட ஆட்சேபனைகளை முன்வைத்தனர்.

 

இதனைத் தொடர்ந்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான அதன் உதவிப் பணிப்பாளர் நாயகம் சுபாஷினி சிறிவர்தன சமர்ப்பணங்களை முன்வைத்தார். 

 

இரு தரப்புச் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதிபதி, அந்தக் கட்டளையை அறிவிக்கும் திகதியை நிர்ணயம் செய்தார்.

 

இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான செவனகல, கிரிஇப்பன்வெவ பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடம் உள்ளிட்ட சொத்துக்கள், கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி ஏற்பட்ட 'அரகலய' போராட்டத்தின் போது சேதமடைந்திருந்தன.

 

குறித்த சொத்துக்களுக்கு நஷ்டஈடு வழங்குவது அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கப்பட்டிருந்த பின்னணியில், அதற்கு முரணாக இழப்பீட்டு அலுவலகத்தில் பணியாற்றிய சில அரச அதிகாரிகளுக்குத் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்து, பிரதிவாதிகளால் 8,850,000 ரூபா (8.85 மில்லியன்) நஷ்டஈட்டுத் தொகை பெறப்பட்டது.

 

இதன்மூலம் 'ஊழல்' குற்றத்தைச் செய்தமை மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இந்தப் பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
08
கொமர்ஷல் வங்கியானது தேசியளவிலான கடலோரம் மற்றும் நீர்நிலைகள் தூய்மைப்படுத்தல் திட்டத்தின் ஊடாக சுற்றுச்சூழல் சார்ந்த தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்

கொமர்ஷல் வங்கியானது தேசியளவிலான கடலோரம் மற்றும் நீர்நிலைகள் தூய்மைப்படுத்தல் திட்டத்தின் ஊடாக சுற்றுச்சூழல் சார்ந்த தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்

Sep 28, 2026 - 04:51 PM


காணொளி
திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

Mobitel 1278