Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
கொமர்ஷல் வங்கியானது தேசியளவிலான கடலோரம் மற்றும் நீர்நிலைகள் தூய்மைப்படுத்தல் திட்டத்தின் ஊடாக சுற்றுச்சூழல் சார்ந்த தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்

Sep 28, 2026 - 04:51 PM

கொமர்ஷல் வங்கியானது தேசியளவிலான கடலோரம் மற்றும் நீர்நிலைகள் தூய்மைப்படுத்தல் திட்டத்தின் ஊடாக சுற்றுச்சூழல் சார்ந்த தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்
Mobitel Inner 1278

கொமர்ஷல் வங்கி, தனது நாடு தழுவிய ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், தன்னார்வலர்கள், பங்காளர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களின் வலையமைப்பை ஒன்றிணைத்து, செப்டெம்பர் 19 அன்று சர்வதேச கடலோர தூய்மை தினத்தைக் (International Coastal Cleanup Day) குறிக்கும் வகையில் நாடு முழுவதும் 20 இடங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய கடலோரம் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு முயற்சியை முன்னெடுத்தது. 

வங்கியின் நிலைபெறுதகு தன்மைக்கான தளம் மற்றும் அதன் கருப்பொருளான – தூய்மையான எதிர்காலத்திற்கான முன்னோக்கிய ஓர் பயணம் (Forward Together for a Cleaner Future) – என்பதன் கீழ் நடத்தப்பட்ட இத்திட்டம், வழக்கமான கடற்கரை தூய்மையாக்கலுக்கு அப்பால் விரிவடைந்தது. இது 16 கடற்கரைப் பகுதிகளிலும் 4 உள்நாட்டு நீர்நிலைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கியதுடன், நாடு முழுவதிலுமுள்ள சமூகங்கள் ஒரே மாதிரியான, தேசியளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சுற்றாடல் முயற்சியில் பங்கெடுக்க வழிவகுத்தது. 

கொழும்பில் நடைபெற்ற பிரதான நிகழ்ச்சித் திட்டம் கல்கிசை கடற்கரை உட்பட வெள்ளவத்தை கடற்கரை மற்றும் காலி முகத்திடல் கடற்கரை ஆகிய மூன்று முக்கிய இடங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்தது. அதே வேளையில், வங்கியின் பிராந்திய அலுவலகங்கள் நாடு முழுவதிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கடற்கரைகள் மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. 

இவ்வேலைத்திட்டத்தின் பிரம்மாண்டத்திற்கு ஏற்ப பங்குதாரர்களின் பங்களிப்பும் பரந்தளவில் அமைந்திருந்தது. கொமர்ஷல் வங்கியின் ஊழியர்கள், முகாமைத்துவ உறுப்பினர்கள், பிராந்திய அலுவலகங்கள் மற்றும் கிளைகள், Future Force தன்னார்வலர்கள், வாடிக்கையாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தன்னார்வலர்கள், இத்திட்டத்தின் தொழில்நுட்ப பங்காளியான Marine Environment Protection Authority (MEPA), United Nations Global Compact (UNGC) Network Sri Lanka அரச மற்றும் அதிகாரசபைகள், சுற்றாடல் அமைப்புகள் மற்றும் சமூக உறுப்பினர்களுடன் இணைந்து தில் பங்கேற்றனர். 

சுற்றாடல் முக்கியத்துவம், அணுகல்தன்மை, சமூகப் பங்களிப்பு, பாதுகாப்பு மற்றும் கூட்டாண்மை வாய்ப்புகள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இந்த 20 இடங்களும் தெரிவுசெய்யப்பட்டதாக வங்கி தெரிவித்துள்ளது. பிராந்திய நடவடிக்கைகளில் களுத்துறை காலிடோ கடற்கரை, அக்குரளை கடற்கரை, நீர்கொழும்பு - கம்மலோடை கடற்கரைப் பூங்கா, திருகோணமலை கடற்கரை - டொக்யார்ட் வீதி, மட்டக்களப்பு - கல்லடி கடற்கரை, புத்தளம் களப்பு, கும்பிச்சன்குளம் வாவி, பராக்கிரம சமுத்திரம், பருத்தித்துறை கடற்கரை மற்றும் கலங்கரை விளக்கப் பகுதி, பண்ணை (யாழ்ப்பாணம்), காலி கோட்டை கலங்கரை விளக்கக் கடற்கரை, உருகுணை பல்கலைக்கழகத்திற்கு எதிரே உள்ள தேவேந்திரமுனை கடற்கரை, தங்காலை - ஒறு வெல்ல கடற்கரை, ஓய்வு விடுதிக்கு எதிரே உள்ள சிலாபம் கடற்கரை, போபத் நீர்வீழ்ச்சி மற்றும் மகாவலி ஆறு - பொல்கொல்ல அணைக்கட்டுப் பகுதி போன்ற இடங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. 

இந்நடவடிக்கைகளின் உடனடி சுற்றாடல் நன்மைகளுக்கு அப்பால், இலங்கையின் கடற்கரை மற்றும் நீர்நிலைச் சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும், பொறுப்பான சுற்றாடல் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது குறித்தும் பரந்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இத்திட்டம் முற்பட்டது. கடற்கரைப் பகுதிகளுடன் சேர்த்து உள்நாட்டு நீர்நிலைச் சூழல்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தியதன் மூலம், கடற்கரைக்கு நேரடி அணுகல் இல்லாத பிராந்தியங்களும் இந்த தேசிய முயற்சியில் பங்களிக்க கொமர்ஷல் வங்கி வழிவகுத்தது. இதன் விளைவாக, கூட்டுப்பணி மற்றும் தன்னார்வத் தொண்டு ஆகியவற்றின் மூலம் புலப்படக்கூடிய சுற்றாடல் தாக்கத்தை உருவாக்க, நாடு தழுவிய வங்கி வலையமைப்பை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை வெளிப்படுத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட நாடு தழுவிய செயற்பாடாக இது அமைந்தது. 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும், ஐக்கிய இராச்சியத்தின் மதிப்பிற்குரிய The Banker சஞ்சிகையால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான Top 1000 World Banks தரவரிசையில், முதலிடம் பெற்ற இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. 

Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100%  கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC)  ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
03
கொமர்ஷல் வங்கியானது தேசியளவிலான கடலோரம் மற்றும் நீர்நிலைகள் தூய்மைப்படுத்தல் திட்டத்தின் ஊடாக சுற்றுச்சூழல் சார்ந்த தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்

கொமர்ஷல் வங்கியானது தேசியளவிலான கடலோரம் மற்றும் நீர்நிலைகள் தூய்மைப்படுத்தல் திட்டத்தின் ஊடாக சுற்றுச்சூழல் சார்ந்த தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்

Sep 28, 2026 - 04:51 PM


காணொளி
திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

Mobitel 1278