Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
SLIM Digis போட்டியில் தனது முதல் பங்கேற்பிலேயே வாகன துறையில் அதிக விருதுகளை வென்ற முகவராக 'Zirateh' சாதனை

Sep 28, 2026 - 04:44 PM

SLIM Digis போட்டியில் தனது முதல் பங்கேற்பிலேயே வாகன துறையில் அதிக விருதுகளை வென்ற முகவராக 'Zirateh' சாதனை
Mobitel Inner 1278

'Zirateh' நிறுவனம் SLIM Digis விருது விழாவில் தனது முதலாவது பங்கேற்பிலேயே மூன்று விருதுகளை வென்று, வாகனத் துறையில் அதிக விருதுகளைப் பெற்ற விளம்பர நிறுவனமாக உருவெடுத்துள்ளது. வெள்ளி (Silver), வெண்கலம் (Bronze) மற்றும் இறுதிப் போட்டியாளர் (Finalist) ஆகிய அங்கீகாரங்களை உள்ளடக்கிய இந்த சாதனையானது, நிறுவனத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், இலங்கையின் வாகன சந்தைப்படுத்தல் துறையில் அதன் வளர்ந்து வரும் பங்களிப்பையும் எடுத்துக் காட்டுகிறது. 

கடுமையான போட்டியும் தொடர்ச்சியான மாற்றங்களும் நிறைந்த இத்துறையில் Zirateh இன் முயற்சிகளை இந்த அங்கீகாரம் வெளிப்படுத்துகிறது. Jetour, UFS Lanka, Tata PV ஆகிய வர்த்தக நிறுவளங்களுக்கான பிரசாரங்களில் Zirateh இன் பங்களிப்பு எப்போதும் பரவலாக அறியப்பட்டிருக்கவில்லை. அப்பிரசாரங்களை நுகர்வோர் இணையத்தளத்தில் ஏற்கனவே பார்த்திருந்த போதிலும் கூட, SLIM Digis விருதுகளின் வெற்றி அதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்கான ஒரு தளத்தை இன்று அமைத்துக் கொடுத்துள்ளது. 

இந்த சாதனையைக் குறித்து, Zirateh நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) தமித சேனாரத்ன அவர்கள் கூறுகையில், "எமது முதலாவது SLIM Digis பங்கேற்பிலேயே மூன்று விருதுகளை வென்றிருப்பதை நாம் மிகப்பெரிய ஒரு சாதனையாக கருதுகிறோம். பல வருடங்களாக வாகனத் துறையில் எமது அனுபவத்தை நாம் வளர்த்து வருகிறோம். எமது பணிகளில் பெரும்பாலானவற்றை மக்கள் இணையத்தளத்தில் ஏற்கனவே பார்வையிட்டுள்ளார்கள். இதன் பின்னணியில் Zirateh நிறுவனமே இருந்தது என்பதை அவர்களில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகளின் மூலம் அந்தப் பணிகளையும் அதற்குப் பங்களித்த மனிதர்களையும் வெளிச்சத்திற்கு கொண்டுவர எமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. சமூக ஊடகங்கள் மூலம், மேலும் அதிக வர்த்தக நிறுவனங்கள் உறுதியான வணிக பெறுபேறுகளை அடைவதற்கு நாம் உதவுவதில் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கிறோம்." என்றார். 

Zirateh நிறுவனம் கடந்த 7 வருடங்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல சர்வதேச சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. Jetour, IM Motors, XPENG LK, TATA PV, Dongfeng Sri Lanka, Perodua, Forthing Sri Lanka, Euro Motors (JAC Double Cabs), Wheels Lanka போன்ற வாகன விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்களுடன் பணியாற்றியமை உள்ளிட்ட விடயங்களை, வாகனத் துறையிலான அதன் அனுபவத்திற்கான உதாரணங்களாக குறிப்பிடலாம். வாகனத் துறைக்கு அப்பால் PickMe, Uber, Timekeeper Global, Emerald, Signature, DIMO, Diamond Best Foods போன்ற வர்த்தக நிறுவனங்களுடன் இந்நிறுவனம் பணியாற்றியுள்ளது. இவை பல்வேறு துறைகளில் அதன் அனுபவத்தை பிரதிபலிக்கிறது. 

தங்களது வர்த்தக நிறுவனங்களின் டிஜிட்டல் இருப்பை வலுப்படுத்த விரும்பும் சந்தைப்படுத்தல் முகாமையாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்களுக்கு, Zirateh இன் அணுகுமுறையானது தொழில்துறை அனுபவத்தை அளவிடக்கூடிய பெறுபேறுகளைத் தரக்கூடிய ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்புடன் இணைக்கிறது. நிறுவனம் 90 நாட்களுக்குள் 1 மில்லியன் பார்வைகளை (1 million organic views) வழங்குவதற்கான உத்தரவாதத்தை அளிக்கிறது, அல்லது இலக்கை அடையும் வரை வாடிக்கையாளருக்கு இலவசமாக பணியாற்ற தயாராக உள்ளது. இயல்பான (organic) சமூக ஊடகச் செயற்பாட்டின் மூலம் வர்த்தக நிறுவனம் தமது விழிப்புணர்வை அதிகரிக்கவும் விற்பனையை உருவாக்குவதிலும் நிறுவனம் கொண்டுள்ள கவனத்தை இந்த அர்ப்பணிப்பானது வெளிப்படுத்துகிறது. 

நிறுவனம் முதன் முறை விருது வெல்லும் விடயமானது, சமூக ஊடக சந்தைப்படுத்தலில் அதன் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் டிஜிட்டல் ஈர்ப்பை வணிகப் பெறுபேறாக மாற்ற வர்த்தக நிறுவனங்களுக்கு உதவுவதில் அது காண்பிக்கும் கவனத்தை எடுத்துக் காட்டுகிறது. பல்வேறு சர்வதேச சந்தைகளில் அதன் இருப்பு மற்றும் வாகனத் துறையிலான அனுபவத்துடன், தனது டிஜிட்டல் சந்தைப்படுத்தல் முயற்சிகளை வலுப்படுத்த விரும்பும் ஏனைய வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இந்த அங்கீகாரத்தை மேலும் மேம்படுத்த Zirateh எதிர்பார்க்கிறது. 

Zirateh மற்றும் அதன் பணிகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, www.zirateh.com இணையத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது 077-268-9752 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
03
கொமர்ஷல் வங்கியானது தேசியளவிலான கடலோரம் மற்றும் நீர்நிலைகள் தூய்மைப்படுத்தல் திட்டத்தின் ஊடாக சுற்றுச்சூழல் சார்ந்த தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்

கொமர்ஷல் வங்கியானது தேசியளவிலான கடலோரம் மற்றும் நீர்நிலைகள் தூய்மைப்படுத்தல் திட்டத்தின் ஊடாக சுற்றுச்சூழல் சார்ந்த தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்

Sep 28, 2026 - 04:51 PM


காணொளி
திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

Mobitel 1278