Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
இந்தியா
டீக்கடையில் தேநீர் அருந்தி, டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர்!

Oct 2, 2026 - 07:05 PM

டீக்கடையில் தேநீர் அருந்தி, டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர்!
Mobitel Inner 1278

தமிழக மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பில் த.வெ.க. வேட்பாளராக மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். 

அவரை ஆதரித்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் த.வெ.க.வினர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். 

த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து த.வெ.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான ச. ஜோசப் விஜய் கடந்த 25 ஆம் திகதி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். 

இதையடுத்து மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலுவை ஆதரித்து இன்று (02) இரண்டாவது முறையாக முதலமைச்சர் விஜய் பிரமாண்ட 'ரோடுஷோ' நடத்தி பிரசாரம் செய்தார். 

இதைத்தொடர்ந்து மதுராந்தகம் தொகுதியில் உள்ள செம்பூண்டி, கிளியா நகர், எல்.எண்டத்தூர், கூடப்பாக்கம் மற்றும் இராமாபுரம் ஆகிய பகுதிகளில் விசில் சின்னத்தில் வாக்களிக்கும்படி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தேர்தல் பிரசாரம் செய்தார். 

அப்போது திரளான தொண்டர்கள் முதலமைச்சரின் வாகனத்தை சுற்றி அணிவகுத்து வீதி மார்க்கமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

இதற்கிடையில் எல்.எண்டத்தூர் பகுதியில் உள்ள ஒரு சிறிய டீக்கடையில் தமிழக முதலமைச்சர் விஜய் தேநீர் அருந்தினார். 

அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோர்களும் தேநீர் அருந்தினர். 

இதையடுத்து கிளியா நகர் பகுதியில் வயல்வெளிகளில் வேலை பார்த்து வந்த விவசாயிகளிடம் தமிழக முதலமைச்சர் விஜய் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

பின்னர் இராமாபுரம் பகுதிக்கு வந்த தமிழக முதலமைச்சர், விவசாயி ஒருவரின் டிராக்டரை வாங்கி வயலில் ஓட்டினார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

Mobitel 1278