Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
உலகம்
ட்ரம்ப் விடுத்த 'டீசல்' எச்சரிக்கை: ஐரோப்பிய ஒன்றியம் அவசர கூட்டம்!

Oct 2, 2026 - 07:55 PM

ட்ரம்ப் விடுத்த 'டீசல்' எச்சரிக்கை: ஐரோப்பிய ஒன்றியம் அவசர கூட்டம்!
Mobitel Inner 1278

ஈரான் மீதான போர் மற்றும் உலகளாவிய சூழல் காரணமாக டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், உலகளாவிய ஆற்றல் சூழல் (Global energy situation) குறித்து கலந்துரையாட ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் அவசரக் கூட்டத்தை இன்று கூட்டுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சி முறை தலைமைத்துவத்தை வகிக்கும் அயர்லாந்து அறிவித்துள்ளது. 

இந்தக் கூட்டம் GMT நேரப்படி பிற்பகல் 1:30 க்கு ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களின் பங்கேற்புடன் நடைபெறும் என அயர்லாந்து தலைமைத்துவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

"தற்போது உலகளவில் டீசல் சந்தை மிகவும் நெருக்கடியான நிலையை எட்டியுள்ளது. இது நுகர்வோருக்கு பெரும் விலை ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்த செய்தித் தொடர்பாளர், இந்த விவகாரத்தில் உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் இணைந்து நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயல்பட ஐரோப்பிய ஒன்றிய தலைமைத்துவம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டார். 

இதற்கிடையில், ஐரோப்பா தனது கையிருப்பில் வைத்துள்ள டீசல் சேமிப்பை உடனடியாக சந்தைக்கு விடுவிக்கத் தவறினால், அமெரிக்காவில் இருந்து டீசல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக நிராகரித்துள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஆணைக்குழுவின் செய்தித் தொடர்பாளர் அன்னா-கைசா இத்கோனென் (Anna-Kaisa Itkonen), அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தலை ஐரோப்பிய ஒன்றியம் முழுமையாக நிராகரிப்பதாகத் தெரிவித்தார். 

ஈரான் போரினால் ஏற்பட்டுள்ள டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த, ஐரோப்பிய நாடுகள் தங்களது அவசரகால டீசல் இருப்பை பயன்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், இந்த அவசரக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

Mobitel 1278