Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
இலங்கைக்குத் தடைகள்? அமெரிக்கா எச்சரிக்கை

Oct 2, 2026 - 08:16 PM

இலங்கைக்குத் தடைகள்? அமெரிக்கா எச்சரிக்கை
Mobitel Inner 1278

இலங்கை கடற்பரப்புக்கு அருகில் சிக்கியுள்ள ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்களுக்குத் தேவையான அத்தியாவசியச் சேவைகளை வழங்கினால், இலங்கை மீது தடைகள் விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளதாக அமெரிக்காவின் 'வோல்ஸ்ட்ரீட் ஜர்னல்' (The Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது.
 

கடந்த சில வாரங்களாக அமெரிக்க அதிகாரிகள் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக, இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் இருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் 20 வெற்று ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன.
 

இந்தக் கப்பல்களில் உள்ள மாலுமிகள் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

சீனாவுக்கு ஈரானிய கச்சா எண்ணெயை விநியோகித்துவிட்டுத் திரும்பிய இக்கப்பல்கள், இலங்கை மற்றும் மலேசிய எல்லைகளுக்கு அருகில் முடங்கியுள்ளன.
 

ஈரானியக் கப்பல்களுக்கு முன்னரும் இலங்கை சேவைகளை வழங்கியிருந்ததால், மலேசியாவுக்கு அருகில் இருந்த பல கப்பல்கள் கடந்த இரண்டு மாதங்களில் இலங்கையை நோக்கிய நகர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 

எனினும், இந்தக் கப்பல்களுக்குச் சேவை வழங்கும் உள்நாட்டு நிறுவனங்கள் மீது 'இரண்டாம் நிலைத் தடைகள்' (secondary sanctions) விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த ஆகஸ்ட் மாதம் எச்சரித்திருந்தது.
 

இதன் காரணமாக, கொழும்பு துறைமுக எல்லையை வந்தடைந்த ஈரானியக் கொடியுடன் கூடிய இரு கொள்கலன் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்குவது 'சாமர்த்தியமான செயலல்ல' என இலங்கை துறைமுக அதிகாரசபையும் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.
 

மேலும், இந்தத் தடைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இலங்கை அதிகாரிகள் 40 பேரைக் கொண்ட குழுவுக்கு அமெரிக்கத் தூதரகம் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று நாட்கள் பயிற்சிப் பட்டறையொன்றையும் நடத்தியுள்ளது.
 

அதேவேளை, கப்பல்களில் உள்ள மாலுமிகளிடமிருந்து உணவுக்காக உருக்கமான கோரிக்கைகள் கிடைக்கப்பெற்ற போதிலும், அரசாங்கத்தின் முறையான அனுமதியின்றி சேவைகளை வழங்க முடியாது என இலங்கை கப்பல் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

Mobitel 1278