Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
ரயிலை மீள் தடமேற்றும் பணிகள் ஆரம்பம்!

Oct 5, 2026 - 12:25 PM

ரயிலை மீள் தடமேற்றும் பணிகள் ஆரம்பம்!
Mobitel Inner 1278

பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் தடம் புரண்டுள்ள நிலையில், அதனை மீள் தடமேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 

இந்த விபத்து காரணமாக மலையக ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்தார். 

கடந்த இரண்டு நாட்களாக குறித்த பகுதியில் நிலவிய பலத்த மழை வீழ்ச்சி காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவித்த அவர், ரயிலை மீள் தடமேற்றும் பணிகளுக்கு மேலதிகமாக, சேதமடைந்த தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். 

இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் மலையக ரயில் சேவைகளை விரைவாக இயல்புநிலைக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த அத்தியட்சகர், மாலை வேளையிலான அலுவலக ரயில் சேவைகளை இயக்குவது குறித்து மீளமைக்கும் பணிகளின் முன்னேற்றத்தைக் கொண்டே தீர்மானிக்க முடியும் எனவும், தற்சமயம் அது குறித்துத் திட்டவட்டமாகக் கூற முடியாது எனவும் மேலும் தெரிவித்தார். 

அத்துடன், தடம் புரண்ட ரயில் மீண்டும் பயணிப்பதற்குப் பொருத்தமானதா என்பது அது கொழும்புக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

Mobitel 1278