Oct 6, 2026 - 05:50 PM

களுத்துறை நகரம் மற்றும் அதனை அண்மித்த சில பகுதிகளில் நாளை மறுதினம் (8) எட்டு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, நாளை மறுதினம் (8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை களுத்துறை, வாத்துவ, வஸ்கடுவ, மொரந்துடுவை மற்றும் பிலமினாவத்தை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
நீர் விநியோகத் தடையினால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, பொதுமக்கள் தமக்குத் தேவையான நீரை முன் கூட்டியே சேமித்து வைத்து, அதனைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.































