Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
செலிங்கோ லைஃப் விற்பனைச் சாதனையாளர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா மூலம் கௌரவம்

Oct 7, 2026 - 10:39 AM

செலிங்கோ லைஃப் விற்பனைச் சாதனையாளர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா மூலம் கௌரவம்
Mobitel Inner 1278

செலிங்கோ லைஃப் நிறுவனம் தனது விற்பனைபிரிவில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற 80 விற்பனை ஊழியர்களை ஊக்குவிக்கும்; வகையில், அவர்களுக்கு வியட்நாம் மற்றும் சீனாவுக்கான வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்புகளை வழங்கியுள்ளது. 

2025ஆம் ஆண்டில் சிறப்பான விற்பனைச் சாதனைகளைப் பதிவு செய்ததன் மூலம் இந்த வெகுமதியை வென்ற இரு குழுக்களில், 62 விற்பனைச் சாதனையாளர்கள் வியட்நாமுக்கும், மேலும் 18 பேர் சீனாவுக்கும் சுற்றுலா மேற்கொண்டனர். 

வியட்நாம் சென்ற குழுவினர் அந்நாட்டின் கலாசாரம், வரலாறு மற்றும் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றனர். தலைநகர் ஹனோயில் நடைபெற்ற சுற்றுலா நிகழ்ச்சிகளில் ஹோ சி மின் வளாகம், ஒன் பில்லர் பகோடா (Ho Chi Minh Complex, One Pillar Pagoda) மற்றும் டிரான் குவோக் பகோடா (Tran Quoc Pagoda) ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை அவர்கள் பார்வையிட்டனர். இதனுடன், Maison Sen உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவு விருந்திலும் பங்கேற்றனர். மேலும், ஹோன் கீம் ஏரியைச் சுற்றி சைக்கிள் ரிக்ஷாவில் மேற்கொண்ட குழுச் சுற்றுலா, ஹனோய் நகரின் உள்ளூர் வாழ்க்கை முறையை நெருக்கமாக அறிந்துகொள்ளும் அனுபவத்தை வழங்கியது. 

தொடர்ந்து, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஹா லோங் விரிகுடாவின் அழகிய கடற்பரப்பில் Aurora Cruise கப்பல் பயணத்தையும் குழுவினர் மேற்கொண்டனர். கப்பலில் வழங்கப்பட்ட மதிய உணவை ரசித்தபடியே, கடலில் உயர்ந்து நிற்கும் பிரமாண்டமான சுண்ணாம்புக்கல் தீவுகளின் இயற்கைக் காட்சிகளையும் கண்டு மகிழ்ந்தனர். சுற்றுலா நிகழ்ச்சிகளில் Sung Sot குகையைப் பார்வையிட்டதும், கயாக் அல்லது மூங்கில் படகு மூலம் Luun குகைக்குச் சென்றதும், Titop தீவில் நேரத்தை செலவிட்டதும் இடம்பெற்றிருந்தன. மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தை ரசித்தபடி, இசை மற்றும் மகிழ்ச்சியான கொண்டாட்டத்துடன் சண்டெக்கில் நடைபெற்ற Aurora Cruiseyயிலும் அவர்கள் கலந்துகொண்டனர். 

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட 18 சாதனையாளர்களுக்கு, அந்நாட்டின் வரலாறு, கலாசாரம் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களை அறிந்துகொள்ளும் வகையில் இந்தச் சுற்றுலா அமைந்திருந்தது. அவர்களின் பயணத் திட்டத்தில் தியானன்மென் சதுக்கம் மற்றும் Forbidden City ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கான விஜயங்கள் இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து Summer Palace அரண்மனையையும் பார்வையிட்டதுடன், Kunming ஏரியில் பாரம்பரியப் படகுப் பயணத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். 

இந்தச் சுற்றுலாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக சீனப் பெருஞ்சுவரின் Mutianyu பகுதி அமைந்திருந்தது. அங்கு கேபிள் காரில் சென்று திரும்பும் வசதியுடன், பிரமாண்டமான பெருஞ்சுவரின் அழகை அவர்கள் கண்டு ரசித்தனர். மேலும், Chaoyang Theatre அரங்கில் நடைபெற்ற கண்கவர் சாகசக் கலை நிகழ்ச்சியையும் குழுவினர் பார்வையிட்டனர். Beijing Zooவில் உள்ள Panda Garden பகுதிக்குச் சென்ற அவர்கள், பாண்டா கரடிகள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் நேரத்தில் அவற்றை நேரில் கண்டு மகிழும் வாய்ப்பையும் பெற்றனர். 

இந்த வெளிநாட்டு சுற்றுலாக்கள், சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் தனது விற்பனை ஊழியர்களை கௌரவிக்கும் செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் தொடர்ச்சியான நடைமுறையின் ஒரு பகுதியாகும். பணியிடத்திற்கு அப்பால் ஒன்றிணைந்து அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு தங்களது சாதனைகளைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பை விற்பனை உத்தியோகத்தர்களுக்கு வழங்குவதன் மூலம் நிறுவனம் அவர்களின் சிறந்த செயல்திறனை அங்கீகரித்து வருகிறது.விற்பனை செயற்பாடுகளில் சிறப்பாகச் செயல்படுபவர்களை கௌரவிப்பதுடன், அவர்களிடையே நட்புறவு மற்றும் குழு உணர்வை வளர்ப்பதற்கும், மேலும் ஊக்கத்தை ஏற்படுத்துவதற்கும், மறக்க முடியாத அனுபவங்களை உருவாக்குவதற்கும் இத்தகைய வெகுமதித் திட்டங்களை செலிங்கோ லைஃப் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. 

சாதனையாளர்களைப் பொறுத்தவரை, இந்தப் பயணங்கள் புதிய இடங்களைச் சென்று பார்ப்பதற்கான வாய்ப்பைத் தாண்டியதாக அமைந்தன. அவர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் சிறந்த பெறுபேறுகளுக்குக் கிடைத்த நேரடியான அங்கீகாரமாகவும், செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் சிறந்த விற்பனைச் சாதனையாளர்களில் இடம்பெறுவதற்கான அவர்களின் உழைப்புக்கான பாராட்டாகவும் இவை அமைந்தன.


MOST READ

காணொளி
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

Mobitel 1278