Oct 7, 2026 - 11:27 AM

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 570 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடமேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தின் ஸ்ரீலங்கா கடற்படைக் கப்பல் 'விஜய', கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து கற்பிட்டி, கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த கடற்கரைப் பகுதியில் இருந்த சந்தேகத்திற்குரிய 15 பொதிகளை பரிசோதித்த போதே இந்தப் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கூட்டுச் சோதனை நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.































