Oct 7, 2026 - 11:18 AM

JXG (ஜனசக்தி குழுமம்) மற்றும் First Capital Holdings PLC ஆகியவற்றின் துணை நிறுவனமான First Capital Treasuries PLC, சன்ன டி சில்வாவை அதன் தலைவராக நியமித்ததன் மூலம் அதன் பணிப்பாளர் சபையை பலப்படுத்தியுள்ளது. அத்துடன், துதீப ரத்வத்த மற்றும் நிரன் மஹவத்த ஆகியோரை சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்களாக நியமித்ததன் மூலம் பணிப்பாளர் சபையின் ஆற்றலை நிறுவனம் மேலும் மேம்படுத்தியுள்ளது.
First Capital Treasuries, இலங்கையின் மூலதனச் சந்தையில் தனது நிலையை மேலும் உயர்த்திக் கொண்டு வரும் இத்தருணத்தில், மூலதனச் சந்தை, திறைசேரி, நிதிச்சந்தை, இடர் முகாமைத்துவம் மற்றும் நிறுவனத் தலைமைத்துவம் ஆகிய துறைகளில் பரந்த அனுபவத்தைக் கொண்ட இப் புதிய நியமனங்கள், பணிப்பாளர் சபையின் திறனை மேலும் வலுப்படுத்துகின்றன.
இந் நியமனங்கள் குறித்து First Capital Treasuries PLC இன் தலைவர் மஞ்சுளா மத்யூஸ் கருத்துத் தெரிவிக்கையில், சன்ன, துதீப மற்றும் நிரன் ஆகியோரின் நியமனங்கள் பல்வேறுபட்ட திறன்கள் மற்றும் நிபுணத்துவத்துடன் First Capital Treasuries இன் செயல்பாடுகளை விரிவுபடுத்துகின்றன. நிறுவனம் தனது மூலோபாய முன்னுரிமைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவும், அதன் பங்குதாரர்களுக்கு நீண்டகால மதிப்பை உருவாக்குவதற்கும் இவர்களின் ஒருங்கிணைந்த அனுபவம் மதிப்புமிக்க வழிகாட்டலை வழங்கும்.” என்றார்.
சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் பொறுப்பிலிருந்து தலைவராக உயர்வு பெற்றுள்ள சன்ன டி சில்வா, இலங்கையின் மூலதனச் சந்தை மற்றும் நிதிச்சேவைத் துறைகளில் பரந்த அனுபவமும் நிபுணத்துவமும் கொண்டவர் ஆவார். அவர் தற்போது Sarvodaya Development Finance PLC இன் தலைவராக பணியாற்றுவதுடன், இதற்கு முன்னர் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்/பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் இலங்கை முதலீட்டுச் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது நிறுவன அனுபவத்தில், Summit Finance PLC, Pan Asia Bank PLC மற்றும் Delmege Group Limited ஆகியவற்றில் சிரேஷ்ட தலைமைத்துவப் பொறுப்புகளும் அடங்கும். மேலும் அவர், Capital Media இன் ஸ்தாபகத் தலைவராகவும் திகழ்கின்றார்.
துதீப ரத்வத்த, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளிலும் திறைசேரி, சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவம் (ALM), நிதிச்சந்தைகள் மற்றும் இடர் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் இரு தசாப்தங்களுக்கும் மேலான பரந்த அறிவையும் தொழில்முறை அனுபவத்தையும் கொண்டவராவார். ABN AMRO, கொமர்ஷல் வங்கி மற்றும் ஹற்றன் நெஷனல் வங்கி ஆகியவற்றில் சிரேஷ்ட திறைசேரி மற்றும் உலகளாவிய சந்தைப் பொறுப்புசார் பதவிகளையும், அவுஸ்திரேலியாவில் நிதிய முகாமைத்துவம் மற்றும் ALM துறைகளில் தலைமைத்துவப் பொறுப்புகளையும் இவர் வகித்துள்ளார். மேலும், derivatives, அந்நியச் செலாவணி மற்றும் வட்டி வீத இடர் முகாமைத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் இவர் சிறந்த தேர்ச்சி பெற்றவராவார்.
நிரன் மஹவத்த, வங்கித் துறை, திறைசேரி, நிதிச் சந்தைகள் மற்றும் இடர் முகாமைத்துவம் ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவராவார். National Development Bank PLC இல் 17 ஆண்டுகளுக்கும் மேலாக துணைத் தலைவராக/ திறைசேரித் தலைவராகப் பணியாற்றிய இவர், அந்நியச் செலாவணி, கடன் சந்தைகள், பணப்புழக்கம், நிதியளிப்பு மற்றும் சந்தை இடர் முகாமைத்துவம் ஆகியவற்றுக்கு பொறுப்பு வகித்தார். அதற்கு முன்பதாக, Deutsche Bank மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றில் திறைசேரி மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கான சிரேஷ்ட பதவிகளை இவர் வகித்துள்ளார்.
இந் நியமனங்களைத் தொடர்ந்து, First Capital Treasuries PLC இன் பணிப்பாளர் சபை, சன்ன டி சில்வா - தலைவர் மற்றும் சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்; சசித் பெரேரா - பிரதம நிறைவேற்று அதிகாரிமற்றும் சுயாதீனமற்ற, நிறைவேற்று அதிகாரமுடைய பணிப்பாளர்; மஞ்சுளா மத்யூஸ், டில்ஷான் வீரசேகர மற்றும் மினெட் பெரேரா - சுயாதீனமற்ற, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்கள்; Dr. நிஷான் டி மெல், சிலானி விஜேசிங்க, துதீப ரத்வத்த மற்றும் நிரன் மஹவத்த - சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்கள் ஆகியோரை உள்ளடக்குகின்றது.
First Capital Treasuries PLC பற்றி
1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட First Capital Treasuries PLC (FCT), இலங்கையின் நிதிச் சந்தையில் முன்னோடியாகத் திகழும் நிறுவனமாகும். நாட்டில் முதன்மை அரசுப் பத்திர விற்பனையாளர் (Primary Dealer License) அனுமதிப்பத்திரத்தைப் பெற்ற முதல் நிறுவனமாகவும் திகழ்கிறது. முன்னணி அரசுப் பத்திர முதன்மை முகவராக திகழும் FCT, பல தசாப்த கால நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, அரசாங்கத் திறைசேரிப் பிணைகள் மற்றும் உண்டியல்கள் (Treasury Bills & Bonds) தொடர்பான விரிவான முதலீட்டுத் தீர்வுகளை வழங்கி வருகிறது.
நிறுவன மற்றும் தனிநபர் முதலீட்டாளர்களுக்கு சந்தை அறிவு, நம்பகமான செயற்பாட்டு திறன் மற்றும் புதுமையான முதலீட்டு உத்திகளை ஒருங்கிணைத்து, அவர்களின் நிதி இலக்குகளை அடைய நிறுவனம் உதவுகின்றது.































