Header Logo
SLIC
Rhythams of Lanka

ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் (14.08.2026)!

Aug 14, 2026 - 09:27 AM -

0

இன்றைய ராசிப்பலன் (14.08.2026)!

இன்று (14) சிம்ம ராசியில் சந்திரன் மகம், பூரம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று லட்சுமி தேவியின் அருள் நிறைந்த நாள். இன்று மரண யோகம் உள்ள தினம். இன்று கடகத்தில் குரு, சூரியன், புதன் ஆகிய கிரகங்களுடன் சந்திரன் சேர்ந்து த்ரிகிரகி யோகம் பலன் கிடைக்க உள்ளது. விருச்சிக, தனுசு, மகரம் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று திருவாடிப் பூரம். ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு. 

மேஷ ராசி பலன் 

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் எதிரிகள் சிக்கல்களை தர வாய்ப்பு உண்டு. உங்களுடைய கருத்துக்களை கவனமாக பதிவிடவும். பணியிடத்தில் உங்களுடைய வேலையை முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். மாலையில் விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். அதே சமயம் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இன்று சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டிலும், சனி மற்றும் செவ்வாய் பதினொன்றாம் வீட்டிலும் உள்ளனர். இதன் காரணமாக, உங்களுடைய திட்டமிட்ட செயல்களில் பெரிய வெற்றி கிடைக்கலாம். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று, உங்கள் ராசி அதிபதி சுக்கிர நீச நிலையில் இருப்பது உங்களுக்கு சில சிக்கல்கள் தர வாய்ப்புகள் உண்டு. பணியிடத்தில் அதிக வேலைப்பளு எதிர்கொள்வீர்கள். இது உங்களுக்கு சில ஆரோக்கியம் பாதிப்பை தரும். உங்கள் உணவு பழக்கத்தில் அவர்கள் கவனம் தேவை.. உங்களுடைய வேலை தொழில் தொடர்பாக சில அனுபவம் வாய்ந்தவர்களின் ஆதரவு தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். மாலை நேரத்தில் சுப நிகழ்ச்சிகளுக்காகப் பணம் செலவழிப்பீர்கள், இது உங்கள் நற்பெயரை அதிகரிக்கும். 

மிதுனம் ராசி பலன் 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பாக்கிய ஸ்தானத்தில் ராகுவும், தன ஸ்தானமான இரண்டாம் வீட்டில் குருவும் சஞ்சாரம் செய்வதன் காரணமாக, காலை முதலே உங்கள் மனநிலை உற்சாகமாக இருக்கும். கடந்த சில நாட்களாக அரசியல் களத்தில் நீடித்த குழப்பம் இன்று முடிவுக்கு வரும். இன்று நீங்கள் திட்டமிட்டதை விட அதிக அளவில் பணிகளை எதிர்கொள்ள நேரிடும். உணவுத்துறை அல்லது வியாபாரம் செய்யக் கூடியவர்களுக்கு லாபம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உங்கள் குழந்தைகளிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகளையும் பெறுவீர்கள். 

கடகம் ராசி பலன் 

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை, தொழில் மற்றும் அரசியலில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பணிகளில் மூத்தவர்களின் ஆதரவு எல்லா வகையிலும் உதவும். நிதி சார்ந்த சிரமங்களை தவிர்க்க, செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். கலை, விளையாட்டு மற்றும் இலக்கியத் துறைகளில் உள்ள தடைகள் நீங்க வாய்ப்புள்ளது. மாலை நேரத்தில் உங்கள் பிள்ளைகளின் திருமண வரன்கள் தேடி வரலாம். சுப பலன்கள் கிடைக்கக்கூடிய நாள் என்பதால் இதை முறையாக பயன்படுத்திக் கொள்ளவும். 

சிம்மம் ராசி பலன் 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாளின் முதல் பாதியில் குடும்ப வாழ்க்கையில் சற்று பதற்றம் நிலவலாம். நீங்கள் தைரியத்துடனும் பொறுமையுடனும் செயல்பட வேண்டும்; அவசரத்தைத் தவிர்க்கவும். முடிவுகளை எடுக்கக்கூடிய மனவலிமை ஏற்படும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். எதிர்பாராத சில லாபங்களும் உங்களுக்கு கைகூடும்.. கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான நேரம் இது. மாலையில் குறுகிய அல்லது நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று, உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் லாப வீட்டில் சஞ்சரிக்கிறார். திட்டங்களுக்கும் முயற்சிகளுக்கும் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் பதற்றம் நீடிக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். . மாலை நேரத்தில், உங்களுடைய வேலை தொழிலில் ஒரு முக்கிய வேலையை முடிப்பதில் பரபரப்பாக செயல்படுவீர்கள்; இது எதிர்காலத்தில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். குடும்ப வாழ்க்கையில், பெற்றோர், சகோதரர்களின் ஆதரவு போதுமான அளவு உங்களுக்கு கிடைக்கும். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் தங்களுடைய பொருளாதார நிலை சமாளிக்க கூடிய விதத்தில் உங்கள் வலிமையும் செல்வமும் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உச்சகட்ட வெற்றியை அடைவீர்கள். ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் லாபம் காண்பீர்கள். உங்கள் குழந்தையின் வெற்றியைக் குறித்த செய்தி மகிழ்ச்சியைத் தரும். மாலை நேரத்தில் புதிய திட்டத்தைத் தொடங்குவீர்கள். சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள். 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் செல்வாக்கும் மதிப்பும் உயரும். காதல் வாழ்க்கையில் உங்கள் துணையுடன் நேரம் சிறைவிட வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் அமையும். எதிரிகள் பலவீனமடைவார்கள். பயணம் தொடர்பான திட்டங்கள் மேற்கொள்ள நல்ல பலன் கிடைக்கும். உங்களுடைய பேச்சில் இனிதானத்தை மற்றும் இனிமையை கடைப்பிடிப்பதில் நன்மை தரும். நிதி நிலையை கட்டுப்பாட்டுடன் அணுகவும். உங்களுடைய பிள்ளைகள் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரம் சொல்லிவிடுவதற்கான வாய்ப்பும் நேரமும் கிடைக்கும். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று புதிய செலவுகள் ஏற்படும். வீண் பழிச்சொற்களைச் சந்திக்க நேரிடலாம். உங்களுடைய கிரக சூழலை சிக்கலான பணிகளை தீர்வு காண சிரமப்படுவீர்கள். உங்கள் நிதி நிலையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளவும். மாலை நேரத்தில் பயணம் மேற்கொள்ளக் கூடிய நபர்கள், கூடுதல் கவனத்துடன் இருக்கவும். கோபத்தைக் கட்டுப்படுத்தவும். தொழில் லாபகரமாக அமையும். ஒரு முக்கியமான நபரை சந்திக்கவும் அவர் மூலம் சில நல்ல ஆலோசனை, வாய்ப்புகள் கிடைக்கலாம். சகஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லக்கூடிய அணுகுமுறை நன்மை தரும். 

மகரம் ராசி பலன் 

மகர ராசி அன்பர்களுக்கு இன்று சில நிர்வாகப் பொறுப்புகள் உங்களை வந்தடையும். இன்றைய முக்கிய பணிகளில் வெற்றி கிடைக்கும். வருமானம் ஏற்றுவதற்கான நல்ல சூழல் இருக்கும். பணியிடத்தில் கடினமான சூழல் மிகுந்தாலும் நண்பர்களுடன் நேரம் செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் புதிய தொடர்புகள் ஏற்படும். கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உங்களுக்குச் சமூக மரியாதையைத் தேடித்தரும். இன்று சிம்ம ராசி நண்பர்களிடம் இருந்து ஒருங்கி இருப்பது நல்லது. சிம்ம ராசிக்காரர்கள் யாரேனும் உங்களுக்கு ஒரு வாய்ப்பை அளித்தால், அதைத் தவிர்ப்பது நல்லது. 

கும்பம் ராசி பலன் 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பண விஷயங்களில் கவனமாக இருக்கவும். அதிக செலவுகள் காரணமாக இன்று கடன் வாங்க நேரிடலாம். குடும்ப விவகாரங்களில் பரபரப்பு நிலவும். உங்கள் திறமையால் மற்றவர்களைக் கவர்வீர்கள். மாலை நேரத்தில் ஒரு சிறப்பான பணியை முடிப்பது உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும்.உங்களுக்கு விருப்பமான சில பொருட்களை வாங்குவதற்கான திட்டமிடுபவர்கள். திடீர் பயணம் செல்வதற்கான சூழல் ஏற்படலாம். மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான பலனை பெறுவார்கள். 

மீனம் ராசி பலன் 

மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கும், சில முக்கிய வேலைகளை செய்து அதில் வெற்றி பெறுவதற்கான நல்ல வாய்ப்புகள் இருக்கும். இன்று உங்கள் போட்டியாளர்களுக்கு நீங்கள் சவாலாகவும், தலைவலியாகவும் இருப்பீர்கள். இன்று நீங்கள் பயணம் மேற்கொள்ளவும், குடும்பத்தினரிடம் நேரம் செலவிடும் வாய்ப்பு உண்டு. உங்கள் குடும்பத்தினர் உங்கள் மீது அதிக அன்பும் மரியாதையும் கொள்வார்கள். தெய்வம், குரு மற்றும் பெரியவர்கள் மீதான பக்தி, நீங்கள் விரும்பும் காரியங்களின் வெற்றிக்கான தடைகளை நீக்கும். இரவில் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.


MOST READ

காணொளி
செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

Mobitel Upahara

ஷோர்ட்ஸ்
கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

நான் தான் வட மாகாண முதலமைச்சர் ஆவேன்!

நான் தான் வட மாகாண முதலமைச்சர் ஆவேன்!

ஒரு இந்துவாக முஸ்லிம் மக்களுக்காகப் பேசுவதில் பெருமையடைகிறேன்!

ஒரு இந்துவாக முஸ்லிம் மக்களுக்காகப் பேசுவதில் பெருமையடைகிறேன்!

அம்பாறை மாவட்டத்திற்கு புகையிரதப் பாதை இணைக்கப்படவுள்ளது!

அம்பாறை மாவட்டத்திற்கு புகையிரதப் பாதை இணைக்கப்படவுள்ளது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?