Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

Aug 14, 2026 - 09:11 PM

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!
Mobitel inner

டுபாயில் கைது செய்யப்பட்ட, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான "ஷிரான் பாசிக்" என்பவர் இன்று (14) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 

அவருடன் மேலும் இரண்டு சந்தேகநபர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர். 

இன்று இரவு 08:48 மணியளவில் எயார் அரேபியா (Air Arabia) சேவையின் 3L-708 எனும் விமானம் மூலம் அபுதாபியிலிருந்து சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். 

தெஹிவளை, களுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஷிரான் பாசிக், சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒருவராவார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் கடந்த மே மாதம் 26 ஆம் திகதி டுபாய் பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டார். 

கடந்த ஈரான் - அமெரிக்க மோதலின் போது, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஈரான் பயன்படுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை தனது கையமக்க தொலைபேசியில் வைத்திருந்த போதே அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். 

அத்துடன், இவரை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக அமெரிக்காவும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் இவர் டுபாயில் பெரும் கோடீஸ்வரராக தலைமறைவாகியிருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

இலங்கைக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் 5 பெரு அளவிலான கடத்தல்காரர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார்.


MOST READ

காணொளி
செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

Mobitel Upahara