Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக இந்த ஆண்டில் 100க்கும் மேற்பட்ட வருமானம் ஈட்டும் திட்டங்கள்!

Aug 14, 2026 - 10:52 PM

உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக இந்த ஆண்டில் 100க்கும் மேற்பட்ட வருமானம் ஈட்டும் திட்டங்கள்!
Mobitel inner

இந்த ஆண்டில் நாடு முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வருமானம் ஈட்டும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கான தொடக்க விழாக்கள் இன்று (14) நாடு முழுவதும் இடம்பெற்றதாக அவ்வமைச்சு அறிவித்துள்ளது. 

அதற்கமைய, புத்தளம் மாவட்ட தொடக்க விழா பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தலைமையில் நடைபெற்றது. 

ஹம்பாந்தோட்டை திட்டத்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் ஆரம்பித்து வைத்தார். 

விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தலைமையில் குருணாகலில் தொடக்க விழா நடத்தப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் வர்த்தக வளாகங்கள், உடற்பயிற்சி மையங்கள், கட்டிடப் பொருள் தர பரிசோதனைக்கூடங்கள், கொங்ரீட் பட்டறைகள், குடிநீர் திட்டங்கள், விவசாய அபிவிருத்தி திட்டங்கள், நெல் உலர்த்தும் மையங்கள், சுற்றுலா வசதிகள் அபிவிருத்தி, உள்ரங்க விளையாட்டு அரங்கங்கள், சூரியமின் சக்தி அமைப்புகள், முன்பள்ளிகள் மற்றும் சிறுவர் பூங்காக்கள், உள்ளூர் உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் மையங்கள், உணவகங்கள், ஈமச்சடங்கு மண்டபங்கள் மற்றும் மின்மயானங்கள், சுற்றுலா பங்களாக்கள் மற்றும் விடுதிகள், கேட்போர் கூடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், மின்சார வாகனங்களை மறுநிரப்பல் செய்யும் மற்றும் வாகன சேவை மையங்கள் போன்றவை செயல்படுத்தப்படவுள்ளன. 

இதற்கிடையில், கிராமத்துடன் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மிகச்சிறிய ஆட்சிப் பிரிவான உள்ளூராட்சி மன்றங்கள் நிதி ஒழுக்கமற்ற நிர்வாகங்களின் கீழ் நீண்டகாலமாக இடம்பெற்ற வீணடிப்பு, தவறான பயன்பாடு மற்றும் முறைகேடுகள் காரணமாகவும், பல வருடங்களாக மக்கள் பிரதிநிதிகள் இன்றி நடத்தப்பட்டு வந்தமையினாலும் கடுமையான திறனற்ற நிறுவனங்களாக மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகின. 

சீர்குலைந்திருந்த அந்த சேவைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட 'மறுமலர்ச்சியின் நகரம்' தேசிய திட்டத்தின் கீழ் பெருமளவிலான நிதியை ஒதுக்கி பல அபிவிருத்தி திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதன் கீழ் 800 கிராமிய பாலங்களைக் கொண்ட பிரம்மாண்ட திட்டம் கடந்த ஜூலை 14 ஆம் திகதி நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிடுகிறது. 

'மறுமலர்ச்சியின் நகரம்' தேசிய திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் அதிகாரப் பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காகவும், உள்ளூராட்சி மன்றங்கள் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் தங்கியிருக்காமல் பொருளாதார ரீதியாக சுயாதீன நிறுவனங்களாக சுயமாக கட்டியெழுப்பப்படும் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் பொருட்டும், புதிய வருமான வழிகளை உருவாக்கிக்கொள்ள அல்லது நிலவும் வருமான வழிகளை மேம்படுத்திக்கொள்ள 2026 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படும் மூலதன நிதி ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அதற்கமைய, இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் வருமானம் ஈட்டும் திட்டங்களுக்காக செயல்திறன் அடிப்படையிலான மூலதன மானியமாக 2,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 

அதற்கு அமைவாக 2026 ஆம் ஆண்டிற்கான திட்ட யோசனைகளை கோரும் நடவடிக்கை பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டது. 

ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களினதும் வருமான மட்டம், கடந்த ஆண்டின் செயல்திறன் மற்றும் முன்மொழியப்பட்ட திட்டத்திற்கு செலவாகும் முழுத் தொகையையும் 5 வருட காலத்திற்குள் ஈட்டிக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட சாத்தியக்கூறு ஆய்வொன்று விசேட குழுவொன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பின்னரே இத்திட்ட யோசனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.


MOST READ

காணொளி
செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

Mobitel Upahara