Aug 14, 2026 - 11:49 PM

பொல்லினால் நடத்தப்பட்ட தாக்குதலால் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 25ஆம் திகதி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த குறித்த அதிகாரி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று (13) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெல்லவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 54 வயதுடைய அதிகாரி என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.























