Oct 11, 2026 - 03:01 PM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 5 வாரத்தை எட்டியுள்ளது. எப்போதும் போல விஜய் சேதுபதி, நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.
5வது வாரத்திற்கான நாமினேஷன் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள், இந்தப் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்க வேண்டும்.
இதன் அடிப்படையில், இந்த வாரம் நாமினேஷனுக்கு முனியம்மாள், லட்சுமி பிரியா, ஜேசன், ஷமா, அன்சர், சாந்தினி, அஸ்மிதா ஆகியோரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்திருந்தனர்.
இந்த வாரம் முழுவதும், இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு மக்கள் வாக்களித்திருந்த நிலையில், இதில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
திடீர் திருப்பமாக, இந்த வாரம் யாரும் வெளியேறவில்லை (No Eviction) என்று விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றிரவு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தெரியவரும்
இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆனந்தி, பிளாக் பாண்டி, மணிவண்ணன், சவின்யா, ஜாவித், குமரன் தங்கராஜன் ஆகியோர் வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


































