Oct 15, 2026 - 03:13 PM

தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சாட் லேகாக் உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
சி.எஸ்.ஏ. புரோ 20 ஓவர் கிண்ணத்திற்கான தொடரில் டைட்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் கே.இசட்.என். இன்லான்ட் அணிக்காக களம் இறங்கிய சாட் லேகாக் 19 ஆவது ஓவரில் மட்டும் 5 விக்கெட்டுகளை அள்ளினார். மொத்தத்தில் 4 ஓவர்கள் பவுலிங் செய்த அவர் 26 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினாலும் அவரது அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஒட்டுமொத்த ஆண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் 5 விக்கெட் வீழ்த்திய 4 ஆவது பவுலர் ஆவார். ஏற்கனவே வங்காளதேசத்தின் அல் - அமின் ஹூசைன், இந்தியாவின் அபிமன்யு மிதுன், இந்தோனேசியாவின் கேட் பிரியந்தனா ஆகியோர் இச்சாதனையை படைத்துள்ளனர்.
































