Oct 15, 2026 - 03:20 PM

பாகிஸ்தானில் இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக லஹிரு உதார சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு இடது தொடை தசைநார் காயம் ஏற்பட்டிருந்தது.
இன்னும் அவர் விளையாடுவதற்கான மருத்துவ அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் குறித்த முத்தரப்பு தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவிற்கு பதிலாக, லஹிரு உதார இணைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து நாடுகளின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர், எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
முதல் போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
































