Oct 20, 2026 - 10:13 PM

பிலியந்தலை, சுவரபொல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மொரட்டுவை ஹோட்டல் உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக வந்தவர்களாலேயே இச்சம்பவமும் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொரட்டுவை ஹோட்டல் உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் காரில் தப்பிச் செல்லும் போது, வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக பிலியந்தலை, சுவரபொல பகுதியில் கார் பழுதடைந்துள்ளது.
இதன்போது அவர்கள் வானத்தை நோக்கிச் சுட்டுவிட்டு, அருகில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
































