Nov 2, 2026 - 10:21 PM

திருகோணமலை, சீன துறைமுகப் பகுதிக்குட்பட்ட கப்பல்துறை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றின் மீது இன்று (02) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களைக் கண்டறிவதற்காகப் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
































