Nov 5, 2026 - 08:03 PM

இலங்கை விமானப் படைக்கு 4,261 மில்லியன் ரூபாயை வழங்குவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க மேலதிக மதிப்பீடு பாராளுமன்றில் இன்று (05) நடைபெற்ற விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரச நிதியத்தில் இருந்தோ அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான வேறு ஏதேனும் நிதியிலிருந்தோ அல்லது அரசாங்கத்தினால் பெறப்படும் ஏதேனும் கடன் தொகையிலிருந்தோ இந்தத் தொகையை இலங்கை விமானப் படைக்கு வழங்குவதற்காக இந்த மேலதிக மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாறிவரும் செயல்பாட்டுச் சூழல், வங்காள விரிகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் பேரழிவு அபாய நிலைகள் மற்றும் தொடர்ச்சியான சீரற்ற காலநில காரணமாக உருவாகும் உடனடி அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை விமானப் படைக்காக ட்ரோன் / ட்ரோன் அல்லாத விமானக் கட்டமைப்பைக் நிறுவுவதற்காக இந்தப் பணம் பயன்படுத்தப்படவுள்ளது.
































