Nov 16, 2026 - 10:13 AM

கனேடிய அரசாங்கத்தின் ஆதரவுடன், ஆசிய மன்றம் மற்றும் பெண்கள் மற்றும் ஊடகக்கூட்டமைப்பு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, பொருளாதார பெறுமானமற்ற பராமரிப்புப் பணிகளை அங்கீகரிப்பது குறித்த மூன்றாவது தேசிய ஒன்றுகூடல், இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகளால் செய்யப்படும் பொருளாதார பெறுமானமற்ற பராமரிப்புப் பணிகளின் சமமற்ற சுமையைக் கையாள்வதற்கு ஒரு பிரத்தியேகக் கொள்கையை வகுக்க அழைப்பு விடுத்தது. மேலும், சமூக மட்டத்தில் பொருளாதார பெறுமானமற்ற பராமரிப்புப் பணிகளின் பொறுப்புகளை அங்கீகரிக்கவும், குறைக்கவும், மறுபகிர்வு செய்யவும் நாடு முழுவதிலுமிருந்து பெண்கள் அமைப்புகள் ஆற்றிய பணிகளையும் காட்சிப்படுத்தியது.
சர்வதேச பராமரிப்பு தினத்தைக் கொண்டாடும் விதமாக 2024 முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்வொன்றுகூடல், இவ்வாண்டு 'கொள்கையிலிருந்து சமூகத்தால் இயக்கப்படும் தீர்வுகள் நோக்கி: பொருளாதார பெறுமானமற்ற பராமரிப்புப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ள சமூகங்களை ஈடுபடுத்துதல்' என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது. இவ்வொன்றுகூடலானது இலங்கையில் பொருளாதார பெறுமானமற்ற பராமரிப்புப் பணிகளை அங்கீகரிப்பதை முன்னெடுத்துச் செல்வதற்காக, அரசாங்கப் பிரதிநிதிகள், நிதிவழங்குநர்; சமூகம், அபிவிருத்திப் பணியாளர்கள், தனியார்துறைப் பங்குதாரர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பெண்கள் அமைப்புகளை ஒன்றிணைத்தது.
நாங்கள் இந்தப் பயணத்தைத் தொடங்கியபோது, ஒரு முக்கியமான முன்னுரிமையைப் பகிர்ந்துகொண்டோம். ஆசிய மன்றமானது, மகளிர்; மற்றும் சிறுவர்; அலுவல்கள் அமைச்சு, கனேடிய அரசாங்கம், பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு, மற்றும் மிக முக்கியமாக, எங்களின் பங்காளர்களான பெண்கள் அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து, பொருளாதார பெறுமானமற்ற பராமரிப்புப் பணிகளை நாங்கள் புரிந்துகொண்டு கையாளும் விதத்தில், பெண்கள் மற்றும் சிறுமிகளின் அனுபவங்கள், தேவைகள் மற்றும் உரிமைகளை மையமாக வைக்க விரும்பினோம்.
யொஹான் ரெபர்ட், வதிவிடப் பிரதிநிதி – இலங்கை மற்றும் மாலைத்தீவுகள், ஆசிய மன்றம்
இலங்கையில் பெண்களின் வலுப்படுத்தல், பால்நிலை சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி; ஆகியவற்றை ஆதரிப்பதில் கனடா உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளது. பெண்களின் உரிமைகளை மேம்படுத்துதல், பெண்கள் அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரப் பங்களிப்பை ஊக்குவித்தல் போன்ற எங்களது பரந்த முயற்சிகளுக்கு, இந்த முன்னெடுப்பு ஒரு முக்கியமான துணை நடவடிக்கையாக அமையும் என்று நாங்கள் கருதுகிறோம்.
மேதகு இசபெல் மார்ட்டின், உயர்ஸ்தானிகர், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனடிய உயர்ஸ்தானிகராலயம்
குடும்ப உறுப்பினர்களைப் பராமரித்தல் மற்றும் வீட்டு வேலைகள் உள்ளிட்ட பொருளாதார பெறுமானமற்ற பராமரிப்புப் பணிகள், சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். உலக அளவிலும் இலங்கையிலும், பொருளாதார பெறுமானமற்ற பராமரிப்புப் பணிகள் சமமற்ற விகிதாசாரத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளால் சுமக்கப்படுகின்றது. மேலும், இது சமூக ரீதியாக 'பெண்களின் வேலை' என்று கருதப்படுவதால், அவர்களின் தெரிவுகளையும் வாய்ப்புகளையும் கட்டுப்படுத்துகிறது.
'செழிப்பான ஒரு தேசம், அழகிய ஒரு வாழ்க்கை' என்ற தேசியக் கொள்கைக் கட்டமைப்பு மற்றும் பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்கள் வலுப்படுத்தல் மீதான தேசியக் கொள்கை ஆகியவற்றில் பொருளாதார பெறுமானமற்ற பராமரிப்புப் பணிகளைக் கையாள்வதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மாண்புமிகு. மகளிர்; மற்றும் சிறுவர்; அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், ஒரு பிரத்தியேக தேசியக் கொள்கையின் மூலம் பொருளாதார பெறுமானமற்ற பராமரிப்புப் பணிகளைக் கையாள்வதற்கான முயற்சிகளுக்குத் தலைமை தாங்குவதில் அமைச்சின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.
மகளிர்; மற்றும் சிறுவர்; அலுவல்கள் அமைச்சானது, பொருளாதார பெறுமானமற்ற பராமரிப்புப் பணிகளைப் பெண்களின் உரிமைகள் சார்ந்த ஒரு பிரச்சினையாக அங்கீகரிக்கவும், இந்த அங்கீகாரம் நடைமுறைச் செயல்பாடுகளுக்கு வழிவகுப்பதை உறுதி செய்யவும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. கொள்கை ரீதியான உறுதிப்பாடுகளைப் பெண்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள முன்னேற்றங்களாக மாற்றுவதே நமது தற்போதைய முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். இதன் மூலம், பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொது வாழ்வில் பங்கேற்பதற்கான கூடுதல் வாய்ப்புகளைப் பெறுவதுடன், ஓய்வெடுக்கவும், தங்கள் சொந்த விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளவும் போதிய நேரத்தைப் பெற முடியும்.
கௌரவ. சரோஜா சாவித்திரி போல்ராஜ், மகளிர்; மற்றும் சிறுவர்; அலுவல்கள் அமைச்சர், மகளிர்; மற்றும் சிறுவர்; அலுவல்கள் அமைச்சு
இந்த ஒன்றுகூடலில், பொருளாதார பெறுமானமற்ற பராமரிப்புப் பணிகள் (Unpaid Care Work) குறித்த தேசியக் கொள்கை வரைவு குறித்து கலந்துரையாடப்பட்டது. பெண்களின் உரிமைகள்;, சமூகப் பாதுகாப்பு, மனித அபிவிருத்தி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிற்கான இலங்கையின் அர்ப்பணிப்புகளை வலுப்படுத்துவதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது பரிசீலனையில் உள்ள இந்தக் கொள்கை, இந்த ஆண்டிற்குள் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தசாப்தத்திற்கும் மேலாக றுஆஊ மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியும் பரப்புரையும் உற்சாகமூட்டுவதாகவும் சவாலானதாகவும் இருந்து வருகின்றன. ஆசிய மன்றத்தின் ஆதரவுடன், சமூக நெறி மாற்றங்கள் மற்றும் சமூக மட்டத்தில் பொருளாதார பெறுமானமற்ற பராமரிப்புப் பணிக்கான பகிரப்பட்ட பொறுப்பு குறித்து மகளிர் அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்தப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். பொருளாதார பெறுமானமற்ற பராமரிப்புப் பணி குறித்த தேசியக் கொள்கையை வரைவினை தயாரித்தலில், மகளிர்; மற்றும் சிறுவர்; அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து பணியாற்றுவதில் பெண்கள்; மற்றும் ஊடகக் கூட்டமைப்பு மிகவும் மகிழ்ச்சி அடைகிறது.
கலாநிதி. சேபாலி கோட்டேகொட, நிகழ்ச்சித்திட்ட இயக்குநர் - பால்நிலை மற்றும் அரசியல் பொருளாதாரம், பெண்கள் மற்றும் ஊடகக்கூட்டமைப்பு
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரத்தில் முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான, பெண்களின் தலைமையிலான சமூக அடிப்படையிலான பகல்நேர பராமரிப்பு மாதிரிகளைச் செயல்படுத்தும் பெண்கள் அமைப்புகளின் பணிகள் குறித்து கலந்துரையாடல்களில் எடுத்துரைக்கப்பட்டன. மேலும், குருநாகல், நுவரெலியா, அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில், பொருளாதார பெறுமானமற்ற பராமரிப்புப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதற்காக வாதிடும் சமூக முன்னெடுப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
குறைந்த செலவில் எளிதில் அணுகக்கூடிய பகல்நேர பராமரிப்புச் சேவைகளைப் பெறுவதில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், பராமரிப்புப் பணிகளை ஆண்கள் மற்றும் சிறுவர்கள் அங்கீகரித்து, அவற்றைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் பேச்சாளர்கள் வலியுறுத்தினர்.
ஆசிய மன்றம் (The Asia Foundation) பற்றி
ஆசிய மன்றமானது ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மிகக் கடினமான சமூக மற்றும் பொருளாதாரச் சவால்களைத் தீர்ப்பதற்காகப் பணியாற்றுகிறது. நீடித்த மற்றும் பயனுள்ள அபிவிருத்தி மற்றும் கொள்கைத் தீர்வுகளை உருவாக்க, ஆழ்ந்த நிபுணத்துவம், நம்பகமான கூட்டாண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் பெறப்பட்ட அறிவினை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம். 70 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசாங்கங்கள், சமூகங்கள் மற்றும் மாற்றத்தை முன்னெடுக்கும் பல்வேறு தரப்பினருடன் இணைந்து, சிக்கலான சூழல்களைக் கையாள்வதற்கும், அவர்களின் இலக்குகளை அடைவதற்கும் நாங்கள் உதவி செய்து வருகிறோம்.
பெண்கள் மற்றும் ஊடகக்கூட்டமைப்பு (Women and Media Collective) பற்றி
பெண்கள் மற்றும் ஊடகக்கூட்டமைப்பு, இலங்கைப் பெண்களைப் பாதிக்கும் சிக்கல்களை ஆராய்ந்து அவற்றுக்குத் தீர்வு காண விரும்பிய இலங்கை பெண்ணியவாதிகள் குழுவால் 1984-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து, பால்நிலை அடிப்படையில் பாகுபாடு காட்டாத, நீதியான சமூகத்தை உருவாக்குவதற்கான மாற்றங்களைக் கொண்டுவருவதில் இந்த அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. சமூக மற்றும் அரசியல் மாற்றங்களுக்குப் பங்களித்திருப்பதோடு, அமைதிச் செயல்முறைகளில் பெண்களின் பங்களிப்பையும் பால்நிலைச் சிக்கல்களையும் உள்ளடக்குவதற்கும், பெண்களின் உரிமைகள் குறித்த அரசின் அங்கீகாரத்தை அதிகரிப்பதற்கும், பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தேவையான சட்ட மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த அமைப்பு பணியாற்றியுள்ளது.

































