Nov 16, 2026 - 10:58 AM

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 'கிறிஷ்' பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ள இரண்டு இந்திய பிரஜைகளுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் விசாரித்து, எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மன்றில் முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கவனத்தில் கொண்ட கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொட இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதன்போது, வழக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டதுடன், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
































