Nov 16, 2026 - 10:29 AM

நவம்பர் 20 முதல் 23 வரை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச
மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறவுள்ள Colombo Motor Show 2026 கண்காட்சியில்
பங்கேற்பதன் மூலம், வாகனக் கடன் வசதிகளை எளிதாக்குவதிலும்,
தொழில்முனைவோரை வலுப்படுத்துவதிலும் தனது அர்ப்பணிப்பை SDB வங்கி மேலும்
உறுதிப்படுத்தவுள்ளது. அன்றாட போக்குவரத்து, சுயதொழில் மற்றும் சிறு வணிக
நடவடிக்கைகளுக்கு இருசக்கர மற்றும் முச்சக்கர வாகனங்களின் முக்கியத்துவத்தை
உணர்ந்து, அவற்றுக்கான குத்தகைத் தீர்வுகளுக்கு வங்கி முன்னுரிமை அளிக்கவுள்ளது.
சமீபகாலமாக பல்வேறு தொழில்சார் கண்காட்சிகளில் வலுவான பங்களிப்பை வழங்கி
வரும் SDB வங்கி, வாகனங்களைச் சொந்தமாக்க விரும்பும் தனிநபர்கள் மற்றும்
வணிகங்களுக்கு ஒரு முக்கிய நிதி பங்காளராகத் தனது நிலையை மேலும் பலப்படுத்தத்
திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு கண்காட்சியில், இருசக்கர மற்றும் முச்சக்கர
வாகனங்களுக்கான பிரத்தியேக குத்தகை சேவைகளை வழங்கும் வங்கித் துறையின்
முன்னணி நிறுவனமாகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதுடன், தனிப்பட்ட
வாகனங்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் பிற வாடிக்கையாளர்
பிரிவினருக்கும் தேவையான நிதி வசதிகளை வழங்கவுள்ளது.
F4 மற்றும் F5 கண்காட்சிக்கூடங்களுக்கு வருகை தருகின்றவர்கள், SDB வங்கியின்
குத்தகை வசதிகளை ஆராய்வதற்கும், தனிப்பயனாக்கப்பட்ட நிதி வழிகாட்டுதலைப்
பெறுவதற்கும், மற்றும் வசதியான நேரடி ஆலோசனைகளின் மூலம் பயனடைவதற்கும்
வாய்ப்பு பெறுவார்கள். ஒப்பீட்டளவில் சிறந்த குத்தகை வட்டி வீதங்கள் மற்றும் தகுதி
மற்றும் ஆவணத் தேவைகளுக்கு உட்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் ஒப்புதல்கள்
கிடைப்பதன் மூலம், வருங்கால வாகன வாங்குபவர்களுக்கான நிதி வழங்கும்
செயல்முறையை எளிதாக்குவதை வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த SDB வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி
மனோஜ் அக்மீமன, “நம்பகமான போக்குவரத்துக்கான அணுகல், தனிநபர்களுக்கும்
தொழில்முனைவோருக்கும் அர்த்தமுள்ள வாய்ப்புகளை உருவாக்க முடியும். Colombo Motor
Show கண்காட்சியில் எங்கள் பங்கேற்பின் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின்
பொருளாதார முன்னேற்றம் மற்றும் நிதி சுதந்திரத்திற்கான விருப்பங்களை ஆதரிக்கும்
அதே வேளையில், வாகன நிதியுதவியை மேலும் அணுகக்கூடியதாகவும்,
வசதியானதாகவும், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப பதிலளிப்பதாகவும் மாற்றுவதை
நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றார்.
இந்த முயற்சியின் மூலம், SDB வங்கி நிதி உள்ளடக்கம் மற்றும் வாடிக்கையாளர் மைய
வங்கிச் சேவைக்கான தனது அர்ப்பணிப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துகிறது, இது
தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் அதிக நகர்வு, சுதந்திரம் மற்றும் நிலை பேணத்தக்க
பொருளாதார வாய்ப்புகளைப் பின்தொடர உதவுகிறது.
SDB வங்கி பற்றிய விபரங்கள்
ஒவ்வொரு தனிநபரின் தேவைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட
மற்றும் விரிவான ஆதரவை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும்,
எதிர்காலத்திற்குத் தயாரான வங்கியான SDB வங்கி, இலங்கை மத்திய வங்கியால்
ஒழுங்குபடுத்தப்பட்ட உரிமம் பெற்ற ஒரு விசேட வங்கியாகும். இது கொழும்பு பங்குச்
சந்தையின் பிரதான சபையில் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் Fitch Ratings நிறுவனத்தால்
BB+(lka) எனக் கடன் தரமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நாடு தழுவிய தனது 93 கிளைகளின்
வலையமைப்பு மூலம், இந்த வங்கி நாடு முழுவதும் உள்ள தனது தனிநபர், சிறு மற்றும்
நடுத்தர நிறுவனங்கள், கூட்டுறவு மற்றும் வணிக வங்கி வாடிக்கையாளர்களுக்கு
விரிவான நிதிச் சேவைகளை வழங்குகிறது. சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக (ESG)
கோட்பாடுகள் SDB வங்கியின் நெறிமுறைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளன.
நிலைபேற்றியல் சார்ந்த நடைமுறைகள் மூலம் உள்ளூர் சமூகங்களையும்
வணிகங்களையும் மேம்படுத்துவதில் இது உறுதியான கவனம் செலுத்துகிறது.
இலங்கையை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்லும் நோக்கில், பெண்களுக்கு
வலுவூட்டுதல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலையான வளர்ச்சி மற்றும்
டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் இந்த வங்கி குறிப்பாக அர்ப்பணிப்புடன்
உள்ளது.
































