Nov 16, 2026 - 11:14 AM

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி இரண்டாவது முறையாக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாலி நகரில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பணிப்பாளர் சபை கூட்டத்தில், அமைப்பில் தொடர்ச்சியும் ஸ்திரத்தன்மையும் பேணப்பட வேண்டியதன் அவசியத்தை பணிபாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனைக் கருத்திற்கொண்டு, பணிபாளர்கள் ஒருமித்த பரிந்துரை மற்றும் ஒப்புதலுடன் அவர் மேலும் மூன்று வருட காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே தனது இரண்டாவது ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராகப் பதவியில் இருக்கும் ஜெய் ஷா, இதன் மூலம் டிசம்பர் 2030 ஆம் ஆண்டு வரை இப்பதவியில் தொடர்வார்.
அவர் டிசம்பர் 2024் ஆம்ஆண்டில் முன்னதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பதவியேற்றார்; அதன்படி அவரது முதல் மூன்று வருட பதவிக்காலம் 2027 டிசம்பர் வரை நீடிக்கிறது, அதைத் தொடர்ந்து அவரது இரண்டாவது காலம் தொடங்கி டிசம்பர் 2030 இல் நிறைவடைகிறது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை யாப்பின்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவை தலைவர் ஒருவர் தலா மூன்று ஆண்டுகள் கொண்ட அதிகபட்சம் இரண்டு பதவிக்காலங்கள் மட்டுமே பதவி வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நியமனம் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஜெய் ஷாவின் தலைமையின் மீது பேரவை கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இந்த முடிவு பிரதிபலிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய விரிவாக்கம், ரசிகர்களின் ஈடுபாடு மற்றும் வணிக மேம்பாடு ஆகியவை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மூலோபாய நெடுஞ்சாலையின் மையமாக உள்ள இந்தத் தருணத்தில், இந்த முடிவு அமைப்பிற்குத் தேவையான தொடர்ச்சியை வழங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 (LA28) ஒலிம்பிக் போட்டிகளுக்கு கிரிக்கெட் திரும்புவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதுடன், புதிய பங்கேற்பு மற்றும் மேம்பாட்டுப் பாதைகளை வழங்கும் விரிவான நீண்ட காலத் போட்டித் திட்டங்களையும் சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
































