Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
06
Colombo Motor Show 2026 நிகழ்வில் இருசக்கர மற்றும் முச்சக்கர வாகனங்களுக்கான பிரத்தியேக குத்தகை சேவைகளுக்கு ஏனைய வங்கிகள் மத்தியில் தன்னை முன்னிலைப்படு

Colombo Motor Show 2026 நிகழ்வில் இருசக்கர மற்றும் முச்சக்கர வாகனங்களுக்கான பிரத்தியேக குத்தகை சேவைகளுக்கு ஏனைய வங்கிகள் மத்தியில் தன்னை முன்னிலைப்படு

Nov 16, 2026 - 10:29 AM

காணொளி
இதைத் தடுத்து நிறுத்துங்கள் முதல்வர் விஜய்!

இதைத் தடுத்து நிறுத்துங்கள் முதல்வர் விஜய்!

மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்!

மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்!

ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய சூரசம்ஹாரம்!

ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய சூரசம்ஹாரம்!

அலட்சியமாக பயணித்த மோட்டார் சைக்கிள் - இறுதியில் நடந்த துயரம்

அலட்சியமாக பயணித்த மோட்டார் சைக்கிள் - இறுதியில் நடந்த துயரம்

யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துவதிலும் மட்டக்களப்பு மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறதா?

யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துவதிலும் மட்டக்களப்பு மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறதா?

மறைந்த மூத்த அரசியல்வாதியான எம்.கே சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

மறைந்த மூத்த அரசியல்வாதியான எம்.கே சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

மத வன்முறைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்!

மத வன்முறைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்!

இன்னும் பல விடயங்களில் துணிச்சல்மிக்க நடவடிக்கைகள் தேவை!

இன்னும் பல விடயங்களில் துணிச்சல்மிக்க நடவடிக்கைகள் தேவை!

6 இலட்சம் மக்களில் சுமார் 2 இலட்சம் பேர் பாதிப்பு!

6 இலட்சம் மக்களில் சுமார் 2 இலட்சம் பேர் பாதிப்பு!

ஆளுமை அற்றவர்களை நிராகரிக்க வேண்டும்!

ஆளுமை அற்றவர்களை நிராகரிக்க வேண்டும்!

இனவழிப்பைப் புறந்தள்ள வேண்டும்!

இனவழிப்பைப் புறந்தள்ள வேண்டும்!

28 பேர் வைத்தியசாலையில்...

28 பேர் வைத்தியசாலையில்...

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

அந்த பக்கம் வந்தால் ஒப்பந்தத்தை கிழித்தெறிவேன்!

அந்த பக்கம் வந்தால் ஒப்பந்தத்தை கிழித்தெறிவேன்!

இந்த வரவு - செலவு திட்டம் வெற்றி பெறும்!

இந்த வரவு - செலவு திட்டம் வெற்றி பெறும்!

    Mobitel Inner 1278

    ஆன்லைனில் காதல் மலர்ந்தால் எல்லாமே சுபமாக முடிந்து விடுமா என்ன? கனடாவில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் பயணம் செய்து இந்திய காதலரைத் திருமணம் செய்ய வந்த 61 வயது பெண்ணுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. திருமணத்துக்கு இளைஞர் மறுப்பு தெரிவித்ததால், விவகாரம் பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது.


    கனடாவைச் சேர்ந்த பெண்ணுக்கும், இந்தியாவின் அரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த நிதின் என்ற இளைஞருக்கும் சுமார் ஓராண்டுக்கு முன்பு டேட்டிங் செயலி மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல், நாளடைவில் காதலாக மாறியதாகக் தெரிவிக்கப்படுகிறது.


    ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து காதலுக்கு எல்லையேது என்ற எண்ணத்துடன் அந்தப் பெண் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு புறப்பட்டு, கடந்த 11 ஆம் திகதி டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்துக்கே நேரில் சென்று காதலியை வரவேற்ற நிதின், அவரை ராஜஸ்தானின் நீம்ரானா பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.


    நிதினின் உறவினர்கள் வீட்டில் இருவரும் 2 நாட்கள் தங்கியிருந்துள்ளனர். அப்போது திருமணம் குறித்த பேச்சுகளும் நடைபெற்றுள்ளன. ஆனால், காதல் கதையில் எதிர்பாராத திருப்பமாக பெண்ணின் வயது சுமார் 61 என்பது தெரியவந்த தாகக் தெரிவிக்கப்படுகிறது.


    பார்ப்பதற்கு இளமை தோற்றத்துடன் காணப்பட்ட அந்த பெண் 60 வயது மூதாட்டி என தெரியவந்ததை அடுத்து திருமணம் செய்துகொள்ள நிதின் மறுத்துள்ளார். ஆன்லைனில் ஓராண்டு வளர்ந்த காதல், நேரில் சந்தித்த சில நாட்களிலேயே தடுமாறியதால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.


    இதனால் அதிருப்தியடைந்த அந்தப் பெண், நவம்பர் 13 ஆம் திகதி கனடா தூதரகத்தைத் தொடர்புகொண்டு நடந்த விவரங்களைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து தூதரகம் அளித்த தகவலின் பேரில் நீம்ரானா பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். நிதினிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கனடா பெண் கோட்புட்லியில் உள்ள கோர் சென்டரில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.


    தனியார் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றும் நிதினிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணக் கனவுடன் கனடாவில் இருந்து இந்தியா வந்த பெண்ணுக்கு கடைசியில் பொலிஸ் நிலையம் வரை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.