Nov 16, 2026 - 10:48 AM

கொலிவூட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய், கடந்த 2024 ஆம் ஆண்டில் அரசியலில் கால்பதித்ததைத் தொடர்ந்து, தான் ஒப்பந்தமாகியிருந்த திரைப்படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு முழுநேர மக்கள் சேவையில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தார்.
அதற்கமைய, தனது படப் பணிகளை நிறைவு செய்த அவர், தற்போது திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் தனுஷும் அரசியலில் களமிறங்கவுள்ளதாகத் தகவல்கள் பரவி வரும் சூழலில், அப்படி ஒரு முடிவை எடுத்தாலும் சினிமாவை எக்காரணம் கொண்டும் கைவிட வேண்டாம் என நடிகை சாய் பல்லவி வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஓம் பட வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தனுஷ் எத்தகைய முடிவை எடுத்தாலும் அவருக்கு நல்லதே நடக்க வாழ்த்துவதாகவும், விஜய் அரசியலுக்குச் சென்றதால் தற்போது நடிப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய சாய் பல்லவி, தனுஷ் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனுஷ் போன்ற திறமையான கலைஞர் நடிப்பிலிருந்து விலகினால் ரசிகர்கள் அவரை வெகுவாக மிஸ் செய்வார்கள் எனவும் அவர் உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார்.
































