Nov 16, 2026 - 10:26 AM

Baurs நிறுவனம், 2027 ஆம் ஆண்டுக்கான பணியாற்றுவதற்கு சிறந்த பணியிடம் (Great Place to Work®) சான்றிதழைப் பெற்றுள்ளது. ஊழியர்கள் வழங்கியிருந்த கருத்துப் பகிர்வின் அடிப்படையில் இந்த உயர்ந்த சான்றளிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த கருத்தாய்வில் பங்கேற்ற ஊழியர்களில் சுமார் 78 சதவீதமானவர்கள், Baurs நிறுவனத்தை பணியாற்றுவதற்கு சிறந்த பணியிடமாக தரப்படுத்தியுள்ளதுடன், இது பணியாற்றுவதற்கு சிறந்த பணியிடத்தை தீர்மானிக்கும் நியமப் பெறுமதியை விட 8 சதவீதப் புள்ளிகள் உயர்வானதாகும். மேலும், நிறுவனத்தில் தாம் இணைந்து கொண்ட போது, தாம் வரவேற்கப்படுவதாக உணர்ந்ததாக சுமார் 90 சதவீதமான ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.
பணியாற்றுவதற்கு சிறந்த பணியிடம் சான்றிதழ் என்பது, ஊழியர்களின் கருத்தளிப்புகளில் முழுமையாக தங்கியுள்ளது. ஊழியர்கள் எந்த அளவிற்குத் தொடர்ச்சியாக உயர் நம்பிக்கையுடைய பணியிட கலாச்சாரத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை இது அளவிடுவதுடன், சிறந்த பணியாளர் அனுபவத்திற்கான ஒரு சர்வதேசத் தர நியமமாகவும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் நல்வாழ்வு, போட்டியான ஊதியம் மற்றும் எதிர்காலத்திற்குப் பணியாளர்களை ஆயத்தப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மனிதவளத் தத்துவத்துடன் (HR Philosophy) கூடிய ஊழியர் பாதுகாப்பை இந்தப் பெறுபேறு பிரதிபலிக்கின்றது என Baurs தெரிவிக்கிறது. மனித வளங்கள், கொள்முதல் மற்றும் நிலைபேறாண்மை பிரிவின் சிரேஷ்ட பொது முகாமையாளர் கென் விஜயகுமார், 2022 ஆம் ஆண்டு நிறுவனத்தில் இணைந்ததுடன், ஊழியர்களுக்கு நட்பான ஒரு கலாசாரத்தை நோக்கி மாற்றத்தை ஏற்படுத்துவதில் தலைமைத்துவமளிக்க எதிர்பார்க்கப்பட்டார். அவர் குறிப்பிடுகையில், “Baurs இல், நாம் வெறுமனே ஒரு வேலைவாய்ப்பை வழங்குவதில் மாத்திரம் நம்பிக்கைகொள்ளவில்லை. மாறாக தனிநபர்களுக்கு வளமானதொரு தொழில்முறைப் பயணத்தை வழங்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.
தெளிவாக வரைறுக்கப்பட்ட வழிகாட்டல்களின் அடிப்படையில் தொழில்நிலை வளர்ச்சி கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன், அதிக ஆற்றல் கொண்ட ஊழியர்கள், உயர் திறனாளர்கள் மற்றும் முக்கிய தொழில்வல்லுநர்கள் தலைமைத்துவ மேம்பாட்டிற்காக அடையாளம் காணப்படுகின்றனர். ஆறு மாதங்கள் நீடிக்கும் தொழிற்பயிற்சித் திட்டம், கிராமப்புற மக்களைச் சென்றடடைவதுடன், அப் பயிற்சி முடிவடைந்ததும் சில பயிற்சிபெறுநர்களுக்கு முழுநேரப் பணிகள் வழங்கப்படுகின்றன.
குடும்ப ஆதரவு இதன் மையமாகும். அரசாங்கத்தால் வழங்கப்படும் 84 நாட்கள் மகப்பேறு விடுமுறையுடன் மேலதிகமாக மூன்று மாதங்கள் நீடிக்கப்படுவதுடன், சம்பளத்துடனான வீட்டிலிருந்து பணியாற்றும் வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. தந்தையருக்குப் பிரசவத்திற்கு முன்னும் பின்னுமாகப் பிரித்துப் பயன்படுத்தக்கூடிய வகையில் இரண்டு வாரங்கள் பிதா விடுமுறை வழங்கப்படுகின்றது. சம்பளக் கட்டமைப்பினுள், குழந்தைப் பராமரிப்புக் கொடுப்பனவை வழங்கிய முதல் நிறுவனம் நாம் னக் குறிப்பிடும் Baurs, ஊழியர்களின் எவ்விதப் பங்களிப்புமுன்றி ஈமச்சடங்கு உதவிகளையும் முழுமையாக நிதி வழங்கிப் பொறுப்பேற்கின்றது.
பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்திலும் பயிற்சிகள் நிறுத்தப்படவில்லை. நிறுவனம் தனது வணிகத்தைச் சாத்தியமான நிலையில் தக்கவைத்துக் கொண்டதுடன், தனது ஊழியர்களைப் பாதுகாத்ததுடன்; கட்டண சந்தாக்களைக் கொண்ட AI கருவிகள் உட்பட, நிர்வாகப் பணியாளர்கள் (White collar) மற்றும் உற்பத்திப் பணியாளர்கள் (Blue collar) இருசாராருக்குமான மறு-திறன் மேம்பாடு (Reskilling), உயர்-திறன் மேம்பாடு (Upskilling) மற்றும் டிஜிட்டல் பயிற்சிகளையும் விரிவுபடுத்தியது.
மாற்றங்கள் நிகழ காலம் எடுக்கும். சில ஊழியர்கள் 30 முதல் 40 வருட கால சேவை அனுபவத்தைக் கொண்டுள்ளனர். Baurs மாற்றத்தை கட்டாயப்படுத்தாமல், ஊழியர்களை ஈடுபடுத்துவதாக கென் விஜயகுமார் குறிப்பிட்டார். “நாங்கள் மாற்றத்தைக் கட்டாயப்படுத்துவதில்லை; மாறாக, அவர்களை ஒன்றிணைத்து, அவர்களையும் ஈடுபடச் செய்து, மாற்றத்தை நோக்கி அவர்களை உத்வேகப்படுத்துகிறோம்.” என்றார்.
Baurs நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை 2018 ஒக்டோபர் மாதம் முதல் வகிக்கும் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொல்ஃப் பிளாசர் குறிப்பிடுகையில், “இலங்கையில் மிகச்சிறந்த நிறுவனமாகத் திகழ்வது எமது நோக்கமல்ல; மாறாக, இலங்கைக்கு மிகச்சிறந்த நிறுவனமாக விளங்குவதே எமது நோக்கமாகும்.” என்றார்.
ரொல்ஃப் பிளாசர், The CEO Magazine இதழால் 2022 ஆம் ஆண்டின் மிகவும் போற்றப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி ஆகவும், Global CEO அமைப்பினால் 2025 ஆம் ஆண்டின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி ஆகவும் பெயரிடப்பட்டதுடன், 2024 ஆம் ஆண்டில் குளோபல் CEO தலைமைத்துவ சிறப்பு விருதையும் பெற்றார். பணிப்பாளர் சபை, தகவல் தொழில்நுட்பப் பணிப்பாளர் அனோஜா பஸ்நாயக்க மற்றும் நிதிப் பணிப்பாளர் பவித்ரா சமரசிங்க ஆகிய இரு பெண் பணிப்பாளர்களை உள்ளடக்கியுள்ளது. மூத்த நிர்வாகக் குழு, அனுபவமிக்க தொழிற்துறை நிபுணர்களைக் கொண்டுள்ளதுடன், அவர்களில் பலர் இலங்கை முழுவதிலுமுள்ள வர்த்தகச் சபைகள் மற்றும் தொழில்முறை மன்றங்களில் தமது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
1897 ஆம் ஆண்டில் Baurs தனது உர வணிகத்தை ஆரம்பித்து, 1945 ஆம் ஆண்டில் சுகாதாரப் பராமரிப்புப் பிரிவிற்கு விஸ்தரிக்கப்பட்டது. இன்று நிறுவனத்தின் ஊழியர்கள் விவசாயம், சுகாதாரப் பராமரிப்பு, நுகர்வோர் பண்டங்கள், தொழிற்துறைத் தீர்வுகள், விமான சேவைகள், சுற்றுலா மற்றும் கல்வி போன்ற துறைகளில் பணியாற்றுகின்றனர். 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையின் பட்டய மனிதவள முகாமைத்துவ நிறுவகத்திடமிருந்து (CIPM Sri Lanka) வாழ்நாள் தங்க விருதை (Lifetime Gold Award) பெற்றார். நிலையான அபிவிருத்தியைப் பொறுத்தவரை, Baurs நிறுவனம் ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்தத்தின் ஒரு அங்கத்துவ நிறுவனமாக விளங்குவதுடன், அதன் காரியாலயம் சூரிய மின்சக்தியில் இயங்குகின்றது.
































