Nov 18, 2026 - 05:08 PM

அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன உள்ளிட்ட நால்வரும் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
ருவன்வெலிசாய வளாகத்திற்கு அருகில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, அநுராதபுர பொலிஸார் குறித்த சந்தேகநபர்களை இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக சத்தாரதன உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாதது ஏன் என நீதிமன்றத்தில் முன்னிலையாகி அறிக்கையிடுமாறு அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அநுராதபுரம் பிரதான நீதவான் நேற்று (17) உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

































