Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
இலங்கைக்கு சர்வதேச அளவில் நல்ல பெயர் கிடையாது!

இலங்கைக்கு சர்வதேச அளவில் நல்ல பெயர் கிடையாது!

மாசியின் விலையைக் குறைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

மாசியின் விலையைக் குறைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

சம்பள முரண்பாடு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினை!

சம்பள முரண்பாடு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினை!

என்னை பிடிக்க உங்களால் முடியாது சார்!

என்னை பிடிக்க உங்களால் முடியாது சார்!

தமிழ் மக்கள் உண்மையின் பக்கமே நிற்பார்கள்!

தமிழ் மக்கள் உண்மையின் பக்கமே நிற்பார்கள்!

வலித்தால் மட்டுமே தீர்வு கிட்டும்!

வலித்தால் மட்டுமே தீர்வு கிட்டும்!

சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு!

சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு!

துரோகங்களை நாங்கள் செய்யவில்லை!

துரோகங்களை நாங்கள் செய்யவில்லை!

கிழக்கிற்கான நிதி ஒதுக்கீடு மோசம்

கிழக்கிற்கான நிதி ஒதுக்கீடு மோசம்

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் விபத்து!

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் விபத்து!

வல்வெட்டித்துறையில் திரண்ட மக்கள் வெள்ளம்!

வல்வெட்டித்துறையில் திரண்ட மக்கள் வெள்ளம்!

பல ஆண்டுகள் நம்மோடு களத்தில் இருக்க வேண்டியவர் சிவாஜிலிங்கம்!

பல ஆண்டுகள் நம்மோடு களத்தில் இருக்க வேண்டியவர் சிவாஜிலிங்கம்!

ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்!

ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்!

அஞ்சலி

அஞ்சலி

இதைத் தடுத்து நிறுத்துங்கள் முதல்வர் விஜய்!

இதைத் தடுத்து நிறுத்துங்கள் முதல்வர் விஜய்!

    Mobitel Inner 1278

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான முத்துக்குமரன் மீது, தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி, தன்னுடன் உடலுறவு வைத்துக்கொண்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக வகிதா சென்னை பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    ஏற்கனவே பல்வேறு பேட்டிகளில் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த வகிதா, தற்போது சட்டரீதியாகவும் களமிறங்கியுள்ள நிலையில், வகிதாவிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து முத்துக்குமரன் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? என்பது குறித்து பிரபல வழக்கறிஞர் பிரியதர்ஷினி விரிவாக பேசியுள்ளார்.


    வகிதாவிடம் இருக்கும் ஆதாரங்கள் குறித்து பேசிய வழக்கறிஞர் பிரியதர்ஷினி, ஆரம்பத்திலிருந்தே முத்துக்குமரன்தான் வகிதாவை அணுகியுள்ளார். முதன்முதலில் ஜனவரி 14 ஆம் திகதி முத்துக்குமரன் வகிதாவுக்கு அனுப்பிய மெசேஜ் மிக முக்கியமானதாக இருக்கிறது.


    அதற்கு பிறகு இருக்கும் கால் லிஸ்ட்டை பார்க்கும்போது, முதன்முதலில் முத்துக்குமரன் தரப்பிலிருந்துதான் கால் வந்திருக்கிறது. சட்டரீதியாக இதனை 'சீக்வென்ஸ் ஆஃப் எவிடென்ஸ்' என்று சொல்வோம். அதாவது, ஆரம்பத்தில் இருவருக்கும் எப்படி அறிமுகமானது என்பதில் தொடங்கி இதுவரை என்ன நடந்தது என்பதுதான் முக்கியம்.


    ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் என எந்த சமூக வலைதள சாட்ஸ் ஆக இருந்தாலும், அவை அனைத்தும் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வலுவான டிஜிட்டல் எவிடென்ஸ் ஆகும்.


    கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே பழக்கம் ஏற்பட்டு, மார்ச் மாதத்தில் காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருப்பதாக முத்துக்குமரன் கூறியதாக வகிதா தெரிவித்துள்ளார்.


    ஆனால், தான் திருமண உறவுக்கு மட்டுமே தயாராக இருப்பதாகவும், சாதாரண உடல்ரீதியான உறவுக்கு தயாராக இல்லை என்றும் வகிதா தெளிவாக பேசியுள்ளார். அதன் பின் அக்டோபர் மாதம் 05 ஆம் திகதி மது அருந்த வற்புறுத்தி உடல்ரீதியான உறவுக்கு அணுகியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எப்படி நிரூபிக்க முடியும் என்பது குறித்தும் பிரியதர்ஷினி விளக்கியுள்ளார்.


    சம்பவம் நடைபெற்ற இடங்களில் இருக்கும் சிசிடிவி காட்சிகள், அபார்ட்மென்ட்டில் உள்ள கேமரா பதிவுகள், இருவரும் உள்ளே சென்ற மற்றும் வெளியே வந்த நேரங்கள், கார் மற்றும் கேப் புக்கிங் விவரங்கள் போன்றவை மிக முக்கியமான ஆதாரங்களாக சேர்க்கப்படும்.


    மேலும், வகிதா கூறியபடி சம்பவம் நடந்தபோது அவருடைய நண்பர் உடனிருந்திருந்தால், அந்த நபரும் முக்கியச் சாட்சியாக சேர்க்கப்படுவார்.


    அதேபோல், வகிதா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்கள் பதிவு செய்யப்படும். தொடர்ந்து யாரிடமிருந்து அழைப்புகள் வந்தன போன்ற தகவல்களும் விசாரணையில் முக்கியத்துவம் பெறும்.


    திருமண வாக்குறுதி எந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டது, அந்த வாக்குறுதியை நம்பி சம்மதம் பெறப்பட்டதா, அந்த சம்மதம் ஏமாற்றத்தின் மூலமாகவோ அல்லது வற்புறுத்தலின் மூலமாகவோ பெறப்பட்டதா என்பதை நிரூபிப்பதுதான் இந்த வழக்கில் முக்கியமான அம்சம்.


    அதேபோல், முத்துக்குமரன் தரப்பு இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் பட்சத்தில், அவற்றை நிரூபிக்கக்கூடிய வலுவான ஆதாரங்கள் அவரிடம் இருக்கிறதா என்பதன் அடிப்படையில்தான் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் அமையும் என்றும், தற்போதைய நிலையில் வகிதாவிடம் இருக்கும் ஆதாரங்கள் மற்றும் துணை ஆதாரங்களின் அடிப்படையில் முத்துக்குமரன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்றும் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.