Nov 18, 2026 - 05:36 PM

45 கோடி பட்ஜெட்டில் உருவாகி வெறும் 60 ஆயிரம் மட்டுமே வசூலித்து படுதோல்வி அடைந்தது. சினிமா வரலாற்றில் படுதோல்வி படம் எது தெரியுமா?
சினிமாவின் ட்ரெண்ட் தற்போது முழுமையாக மாறிவிட்டது. ‘ஸ்டார்’ நடிகர்களின் படங்களே சமீப காலங்களில் தோல்வியைத் தழுவுகின்றன. முக்கியமான இயக்குநர்கள் என போற்றப்பட்ட பலரின் படங்களும் பாக்ஸ் ஆஃபீஸில் தோல்வியைத் தழுவுகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம் ‘டாக்ஸிக்’, ‘பாரடைஸ்’, ‘பெத்தி’, ‘தக் லைஃப்’, ‘கேம் சேஞ்சர்’ என சொல்லிக்கொண்டே போகலாம்.
அதே சமயம் பிரபலமான நடிகர்கள் இல்லாவிட்டாலும் அழுத்தமான அதே சமயம் போரடிக்காத கதை இருந்தால் மக்கள் அதை வெற்றி படமாக்குகிறார்கள். அந்த வகையில் சமீப காலத்தில் படுதோல்வி அடைந்த ஒரு படம் குறித்து பார்க்கப் போகிறோம். ரூ.45 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் மொத்தமாக ரூ.60 ஆயிரம் மட்டுமே வசூலித்தது. அதாவது பட்ஜெட்டில் 0.0001% கூட லாபத்தை பார்க்கவில்லை.
அந்தப் படம் தான் இந்தியில் கடந்த ஆண்டு வெளியான ‘தி லேடி கில்லர்’. அஜய் பாஹி இயக்கத்தில் அர்ஜூன் கபூர், பூமி பட்னேகர் நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டது. ஆனால், படம் வெளியான முதல் காட்சியிலிருந்தே எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாகின.
முதல் நாள் இந்தப் படம் இந்தியா முழுவதுமே 293 டிக்கெட்டுகளை மட்டுமே விற்றது. 45 கோடி ரூபா பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் பெரிய அளவில் புரமோஷன் உள்ளிட்ட விஷயங்கள் இல்லாததால் முதல் நாள் நாடு முழுவதும் வெறும் 12 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டது. ஆனால், அந்தக் காட்சிகளுக்கும் ரசிகர்கள் கூட்டம் குறைவாகவே இருந்துள்ளது.
இந்தப் படத்தின் தோல்விக்கு மற்றொரு காரணம், அதன் முழுமையற்ற க்ளைமாக்ஸ். படமே முழுமையில்லாமல் ஆங்காங்கே தொக்கி நிற்பதும், ரசிகர்களுக்கு நிறைவளிக்காத க்ளைமாக்ஸ் காட்சிகளும் தோல்விக்கு காரணமாக அமைந்தன. மேலும் படம் அவசர கதியில் பாதி ஸ்கிரிப்ட் உடன் படமாக்கப்பட்டதாக இயக்குநர் கூறியிருந்தார்.
ஆரம்பத்தில் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. ஆனால் படத்தை பார்த்த பின்பு, ஓடிடி வெளியீட்டை கைவிட்டது. மேலும் எந்த ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க முன்வராத நிலையில், யூடியூப்பில் படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரூ.45 கோடி பணத்தை முதலீடாக்கி வெறும் ரூ.60 ஆயிரம் மட்டுமே வசூலித்த இந்தப் படம் அண்மையில் வெளியான படங்களிலேயே படுதோல்வி அடைந்த படம் என மோசமான வரலாற்றைப் படைத்துள்ளது.

































