Header Logo

செய்திகள்
ஹங்குரன்கெத்த பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம்

Jun 30, 2025 - 05:02 PM -

0

ஹங்குரன்கெத்த பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம்

ஹங்குரன்கெத்த பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இடம்பெற்றது. மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எம்.கே.சி.கே அத்தபத்து அவர்களின் தலைமையில் இன்று (30) ஹங்குரன்கெத்த பிரதேச சபை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜயசேகர முதியன்சேலாகே அராவே கெதர லயனல் குணரத்ன அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது பகிரங்க வாக்கெடுப்பினூடாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் ராமையா ருசன்ஸ்குமார் 22 வாக்குகளைப் பெற்று பிரதி தவிசாளரானார்.

குறிப்பாக ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பதவிக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர் ராமையா ருசன்ஸ்குமார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.

இதில் இ.தொ.கா வேட்பாளர் ராமையா ருசன்ஸ்குமார் 22 வாக்குகளை பெற்று பிரதி தவிசாளர் ஆனதுடன், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் 20 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

மொத்தமாக ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்காக 42 உறுப்பினர்கள் தேர்வாகி சபை உறுப்பினர் அங்கீகாரம் பெற்றுள்ளனர்.

--

MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title