Header Logo

செய்திகள்
சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

Jul 13, 2025 - 09:49 PM -

0

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

சட்டவிரோத சிகரெட்டுக்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சிகரெட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக இன்று நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ .டபிள்யூ. எஸ். நிசாந்த வெதகேக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 7 இலட்சத்து 45,000 ரூபா பெறுமதியான 4,601 சட்டவிரோதமாக சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சந்தேக நபர்களுடன் பெருந்தொகையான இந்த சட்ட விரோத சிகரெட்டுக்களுடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

--

MOST READ

காணொளி
குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

title