Header Logo
SLIC
பல்சுவை
ரகசியங்களை விற்ற கடற்படை வீரருக்கு 200 மாதங்கள் சிறை!

Jan 13, 2026 - 01:28 PM

ரகசியங்களை விற்ற கடற்படை வீரருக்கு 200 மாதங்கள் சிறை!
Mobitel Inner 1278
EDEX Inner

அமெரிக்கக் கடற்படையின் ரகசியங்களைச் சீனாவிற்கு விற்ற 25 வயது முன்னாள் கடற்படை வீரர் ஜின்ச்சாவ் வெய் என்பவருக்கு அமெரிக்க மத்திய நீதிமன்றம் 200 மாதங்கள் (சுமார் 17 ஆண்டுகள்) சிறை தண்டனை விதித்துள்ளது. 

சான் டியாகோவில் உள்ள USS Essex என்ற போர்க்கப்பலில் பணியாற்றி வந்த வெய், 2022 ஆம் ஆண்டு முதல் சீன உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பில் இருந்துள்ளார். 

வெய் சுமார் 50 இற்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்ப கையேடுகளைச் சீனாவிற்கு வழங்கியுள்ளார். 

இதில் போர்க்கப்பல்களின் ஆயுத அமைப்புகள், ரேடார் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய ராணுவப் பயிற்சிகளின் வரைபடங்கள் அடங்கும். 

அமெரிக்கக் கடற்படையின் தாக்குதல் திறன்கள் குறித்த ரகசியத் தகவல்களை அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுத்து அனுப்பியுள்ளார். இதற்காக பல லட்சம் ரூபாய் லஞ்சமாக வெய் பெற்றுள்ளார். 

பணத்திற்காக தான் இதை செய்ததாக வெய், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 

'வெய் தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காகத் தனது சக வீரர்களின் உயிரையும், நாட்டின் பாதுகாப்பையும் பணயம் வைத்துள்ளார். இது மன்னிக்க முடியாத குற்றம்' என்று கூறி 200 மாதங்கள் சிறை தண்டனை விதித்தனர். 

சீன வம்சாவளியை சேர்ந்த வெய்-க்கு 2022 ஆம் ஆண்டு அவர் அமெரிக்க கடற்படையில் சேர்ந்த போதுதான் அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ
08
“ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனை சிறப்பு விருதைக் கொண்டாடிய ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

“ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனை சிறப்பு விருதைக் கொண்டாடிய ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

Aug 25, 2026 - 05:45 PM

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278