Header Logo

விளையாட்டு
டி20 உலகக் கிண்ணத்திற்கான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு!

Jan 27, 2026 - 03:19 PM -

0

டி20 உலகக் கிண்ணத்திற்கான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு!

அடுத்த மாதம் 7 ஆம் திகதி இந்தியாவில் தொடங்க உள்ள டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து கடைசி நேரத்தில் பங்களாதேஷ் விலகிய நிலையில், மாற்று அணியாக ஸ்காட்லாந்து இடம் பிடித்துள்ளது. 

அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் ஐசிசி டி20 உலகக் கிண்ண தொடர் நடைபெற உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களால் இந்தியா பயணிக்க முடியாது என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் எனவும் பங்களாதேஷ் தெரிவித்தது. 

பங்களாதேஷின் அணியின் கோரிக்கைக்கு 16 ஐசிசி உறுப்பினர்களில் 14 நாடுகள் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க காலக்கெடு விதித்தது ஐசிசி. இந்த சூழலில் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு பயணிக்காது என பங்களாதேஷ் அரசு தெரிவித்தது. 

இதையடுத்து இந்த தொடரில் பங்களாதேஷிற்கு மாற்றாக ஸ்காட்லாந்து அணி பங்கேற்கும் என ஐசிசி அறிவித்தது. இதனால் இப்போது 'சி' பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள், நேபாளம், இங்கிலாந்து, இத்தாலி அணிகளுடன் ஸ்காட்லாந்து அணி பங்கேற்று விளையாட உள்ளது. இந்நிலையில், 15 வீரர்கள் கொண்ட ஸ்காட்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

டி20 உலகக் கிண்ண தொடருக்கான ஸ்காட்லாந்து அணி விபரம், 

ரிச்சி பெர்ரிங்டன் (அணி தலைவர்), டாம் புரூஸ், மேத்யூ கிராஸ், பிராட்லி கியூரி, ஆலிவர் டேவிட்சன், கிறிஸ் கிரீவ்ஸ், ஜைனுல்லா இஹ்சான், மைக்கேல் ஜோன்ஸ், மைக்கேல் லீஸ்க், பின்லே மெக்ரீத், பிராண்டன் மெக்முல்லன், ஜார்ஜ் முன்சி, சப்யான் ஷெரீப், மார்க் வாட், பிராட்லி வீல்

MOST READ

காணொளி
வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை

வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

title