விளையாட்டு
ஸ்காட்லாந்து அணி​யில் இடம்பிடித்த ஆப்கன் வம்சாவளி வீரர்!

Jan 28, 2026 - 03:52 PM -

0

ஸ்காட்லாந்து அணி​யில் இடம்பிடித்த ஆப்கன் வம்சாவளி வீரர்!

ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7 ஆம் திகதி இந்​தியா மற்​றும் இலங்கை​யில் ஆரம்பமாகிறது. 20 அணி​கள் கலந்து கொள்ளும் இந்​தத் தொடரில் ‘சி’ பிரி​வில் இடம் பெற்றிருந்த பங்களாதேஷ் அணி, பாது​காப்பு காரணங்​களை கூறி திடீரென விலகியது. இதையடுத்து அந்த அணிக்கு மாற்​றாக ஸ்காட்லாந்து அணி சேர்க்​கப்​பட்​டது. 

இந்​நிலை​யில் உலகக் கிண்ண தொடரில் பங்​கேற்​கும் 15 பேர் கொண்ட ஸ்காட்​லாந்து அணியை அந்​நாட்டு கிரிக்கெட் வாரி​யம் அறி​வித்​துள்​ளது. அணி தலைவராக ரிச்சி பெரிங்​டன் நியமிக்​கப்​பட்​டுளளார். கடந்த 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்​றும் மேற்கிந்​தி​யத் தீவு​களில் நடைபெற்ற டி 20 உலகக் கிண்ண தொடரில் விளையாடிய 11 வீரர்​களுக்கு மறு​படி​யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்​ளது. 

மேலும் ஆப்​கானிஸ்​தானை சேர்ந்த வம்​சாவளி வீர​ரான வேகப்​பந்து வீச்​சாளர் ஜைனுல்லா இஹ்​சான் அறி​முக வீரராக சேர்க்​கப்​பட்​டுள்​ளார். இதே​போன்று பாகிஸ்​தான் வம்​சாவளியைச் சேர்ந்த சஃப்​யான் ஷெரீபுக்​கும் அணியில் வாய்ப்பு கொடுக்​கப்​பட்​டுள்​ளது. 

ஸ்காட்​லாந்து இடம் பெற்​றுள்ள ‘சி’ பிரி​வில் இத்​தாலி, மேற்கிந்தியத் தீவு​கள் அணி, இங்​கிலாந்​து, நேபாளம் அணி​களும் இடம் பெற்றுள்​ளன. 

அணி விவரம், ரிச்சி பெரிங்​டன் (கேப்​டன்), டாம் புரூஸ், மேத்யூ கிராஸ், பிராட்லி கியூரி, ஆலிவர் டேவிட்​சன், கிறிஸ் கிரீவ்​ஸ், ஜைனுல்லா இஹ்​சான், மைக்​கேல் ஜோன்​ஸ், மைக்​கேல் லீஸ்க், ஃபின்லே மெக்​ரீத், பிரண்​டன் மெக்​முல்​லன், ஜார்ஜ் முன்​சி, சஃப்​யான் ஷெரீஃப், மார்க் வாட், பிராட்லி வீல்.

Comments
0

MOST READ
01
02
03
04
05