Header Logo

விளையாட்டு
பங்களாதேஷ் அணியிற்கு மீண்டும் ஷாகிப் அல் ஹசன்?

Jan 31, 2026 - 10:03 AM -

0

பங்களாதேஷ் அணியிற்கு மீண்டும் ஷாகிப் அல் ஹசன்?

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சு சகலத்துறை ஆட்டக்காரரான இருந்தவர் ஷாகிப் அல் ஹசன். ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததும், இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதனால் பாதுகாப்பு அச்சம் காரணமாக பங்களாதேஷில் இருந்து வெளியேறினார். தற்போது அவர் வெளிநாட்டில் வசித்து வருகிறது. 

இந்த நிலையில் அவரை மீண்டும் அணியில் சேர்க்க பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டு திட்டமிட்டுள்ளது. இதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் ஒருமித்த கருத்தோடு சம்மதம் தெரிவித்துள்ளனர். 

ஒருவேளை இது வெற்றி பெற்றால், ஷாகி அல் ஹசன் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் வரை விளையாட வேண்டும் என்று அந்த அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் முகமது அஷ்ரபுல் வலியுறுத்தியுள்ளார். 

பாகிஸ்தான் அணி மார்ச் மாதம் பங்களாதேஷ் சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்னதாக ஷாகிப் அல் ஹசனை அணிக்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல வெளியாகியுள்ளது. 

நாங்கள் ஷகிப்புடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம், அவரும் விளையாட ஆர்வமாக இருக்கிறார். எங்கள் திட்டப்படி எல்லாம் நடந்தால், பாகிஸ்தானுக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கு முன்பே அவரை மீண்டும் அணிக்குக் கொண்டுவர முடியும் என்று நம்புகிறோம் என பிசிபி டைரக்டர் ஆசிப் அக்பர் தெரிவித்துள்ளார். 

ஷாகிப் அல் ஹசன் பங்களாதேஷில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார். ஆனால் ஆட்சி மாற்றத்தால் பாதுகாப்பு காரணமாக அவர் பங்களாதேஷ் செல்லவில்லை. சொந்த மண்ணில் விளையாடிய பிறகு ஓய்வு பெற ஷாகிப் அல் ஹசன் விரும்புகிறார்.

MOST READ

காணொளி
வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை

வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

title