விளையாட்டு
விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்!

Feb 2, 2026 - 02:00 PM -

0

விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்!

அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2 - 0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. 

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டி20 போட்டி லாகூரில் இன்று (02) நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ஓட்டங்களை பெற்றது. சைம் அயூப் 37 பந்தில் 56 ஓட்டங்களையும், பாபர் அசாம் 36 பந்தில் 50 ஓட்டங்களையும் பெற்றனர். 

இதையடுத்து, 208 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 16.5 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 96 மாத்திரமே பெற்றது. 

இதன்மூலம் 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் டி20 தொடரை 3 - 0 என கைப்பற்றி அவுஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்தது. 

இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பாபர் அசாம் முதலிடம் பிடித்தார். 

விராட் கோலி 38 அரைசதங்கள் பெற்றுள்ள நிலையில் பாபர் அசாம் 39 அரைசதம் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் கோலிக்கு அடுத்தபடியாக ரோஹித் (32), ரிஸ்வான் (30) ஆகியோர் உள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05