Header Logo

விளையாட்டு
பாகிஸ்தானுக்கு ஐசிசி மீண்டும் எச்சரிக்கை!

Feb 4, 2026 - 10:15 PM -

0

பாகிஸ்தானுக்கு ஐசிசி மீண்டும் எச்சரிக்கை!

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்தது. அதே நேரத்தில் உலகக் கிண்ணத்திலும் ஆடுவோம் என்றும் தெரிவித்து இருந்தது. 

இதை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) எச்சரிக்கை விடுத்தது. கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இதனால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.பாகிஸ்தான் அரசின் முடிவுப்படி இந்தியாவுக்கு எதிராக விளையாட முடியாது என்ற முடிவில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. மீண்டும் எச்சரித்துள்ளது.பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் ஒளிபரப்பு நிறுவனத்திடம் இருந்து சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது. 

பாகிஸ்தானின் ஆண்டு வருமமான பகிர்வான ரூபா 316 கோடி (இந்திய மதிப்பில்) ஐ.சி.சி. நிறுத்தி வைத்துள்ளது. அந்த நிதியில் இருந்து ஒளிபரப்பாளர்களுக்கு ஐ.சி.சி. செலுத்த வாய்ப்புள்ளது. ஒளிபரப்பு நிறுவனம் தொடுக்கும் வழக்கில் பாகிஸ்தானுக்கு எந்த விதத்திலும் ஐ.சி.சி. உதவியாக இருக்காது என்றும் கூறப்படுகிறது. 

டி.ஆர்.சி. குழுவிடம் ஒளிபரப்பு நிறுவனம் மேல் முறையீடு செய்யலாம்.இதற்கிடையே ஐ.சி.சி.யின் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title